மேலும்

செய்தியாளர்: யாழ்ப்பாணச் செய்தியாளர்

இந்தியத் தூதுவருடன் முதல்வர் விக்கி சந்திப்பு – புதிய அமைச்சர்களுக்கு மாத்திரம் அனுமதி

இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து இன்று வடக்கிற்கான முதலாவது பயணத்தை மேற்கொண்டு பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தி வருகிறார்.

வடமாகாண அமைச்சர்களாக அனந்தி, சர்வேஸ்வரன் பதவியேற்பு

வடக்கு மாகாணசபையின் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வு இன்று காலை வடக்கு மாகாண ஆளுனர் செயலகத்தில், ஆளுனர் ரெஜினோல்ட் குரே, முன்னிலையில் இடம்பெற்றது.

சிறிலங்கா மத்திய வங்கியின் யாழ். பணியக செயற்பாடுகள் கிளிநொச்சிக்கு மாற்றம்

யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா மத்திய வங்கியின் பிராந்திய உதவிப் பணியகத்தின் செயற்பாடுகள், கிளிநொச்சி அறிவியல் நகரில் செயற்படும், சிறிலங்கா மத்திய வங்கியின் பிராந்திய பணியகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

சர்வேஸ்வரன், அனந்திக்கு 3 மாதங்களுக்கு தற்காலிக அமைச்சர் பதவி – விக்கி அறிவிப்பு

வடக்கு மாகாணசபையின் கல்வி அமைச்சராக கலாநிதி சர்வேஸ்வரனையும், பெண்கள் விவகார அமைச்சராக அனந்தி சசிதரனையும்,  3 மாதங்களுக்கு, தற்காலிக  அடிப்படையில் நியமிக்க முடிவு செய்திருப்பதாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வித்தியா கொலை வழக்கு – யாழ். மேல் நீதிமன்றில் இன்று விசாரணைகள் ஆரம்பம்

புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன், கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு, யாழ். மேல் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளைக் கொண்ட தீர்ப்பாயம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

தேவைகள், முன்னுரிமைகளுக்கு அமையவே அமைச்சர்களின் நியமனம் – முதலமைச்சர்

வடக்கு மாகாண கல்வி அமைச்சரின் நியமனம் போருக்குப் பின்னரான, தேவைகளுக்கும் முன்னுரிமைகளுக்கும் அமைவாகவே இடம்பெறும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சர் பதவிக்கு ஆர்னோல்ட் – தமிழ் அரசுக் கட்சி பரிந்துரை

வடக்கு மாகாண கல்வி அமைச்சராக, மாகாணசபை உறுப்பினர் இமானுவேல் ஆர்னோல்ட்டை நியமிக்குமாறு, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு, இலங்கை தமிழ் அரசுக் கட்சி பரிந்துரைக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தம்மை ஆதரித்தவர்களுக்கு நன்றி கூறுகிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

அண்மையில் நடந்த அரசியல் குழப்பங்களின் போது, தமக்கு ஆதரவு அளித்த தமிழ் மக்களுக்கு நன்றி தெரிவித்து, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மாவையைச் சந்தித்தார் முதலமைச்சர் – கூட்டாகச் செயற்படுவதற்கு இணக்கம்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவுக்கும் இடையில் நேற்று முக்கிய பேச்சு நடத்தப்பட்டது.

புதிய அமைச்சர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை – சுயவிபரக் கோவைகளை அனுப்ப முதல்வர் கோரிக்கை

வடக்கு மாகாணசபையில் வெற்றிடம் ஏற்பட்டுள்ள இரண்டு அமைச்சர் பதவிகளுக்கு நியமனங்களை செய்வதற்காக, அனைத்து மாகாணசபை உறுப்பினர்களிடம் இருந்தும் விண்ணப்பங்களைக் கோரியிருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.