மேலும்

செய்தியாளர்: யாழ்ப்பாணச் செய்தியாளர்

ஈபிஆர்எல்எவ் வெளியேறினாலும் கூட்டமைப்புக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு – என்கிறார் சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ஈபிஆர்எல்எவ் வெளியேறியுள்ள போதிலும், உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டமைப்பு வெற்றி பெறும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

வல்வெட்டித்துறை நகரசபைக்கு சுயேட்சைக் குழு கட்டுப்பணம்

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சுயேட்சைக் குழுவொன்று நேற்று யாழ். மாவட்டச் செயலகத்தில் உள்ள தேர்தல் பணியகத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக சட்ட பீடத்துக்கு சிங்கள மாணவர்கள் அதிகளவில் சேர்ப்பு

யாழ்.பல்கலைக்கழகத்தின் சட்டபீடத்தின் எட்டாவது பிரிவுக்கு, பெரும்பான்மையாக சிங்கள மாணவர்களே உள்ளீர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பாகியது உதயசூரியன் கூட்டணி

ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன், ஈபிஆர்எல்எவ் இணைந்து உருவாக்கியுள்ள தேர்தல் கூட்டணிக்கு, தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்று பெயரிடப்பட்டுள்ளது.

கூட்டமைப்பு பலமான அரசியல் கட்சியாக பரிணமிக்க வேண்டும் – விக்னேஸ்வரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனைவரையும் உள்ளடக்கிய – பலமான அரசியல் கட்சியாகப் பரிணமிக்க வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 16 உள்ளூராட்சி சபைகளுக்கு கட்டுப்பணம் செலுத்தியது தமிழ் காங்கிரஸ்

யாழ்.மாவட்டத்தில் 16 உள்ளூராட்சி சபைகளுக்குப் போட்டியிடுவதற்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் நேற்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

இணக்கப்பாடு இல்லாவிடின் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்க புளொட் முடிவு

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான ஆசனப்பங்கீட்டில் சுமுகமான இணப்பாடு ஏற்படாவிடின், தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் முடிவு செய்துள்ளது.

உதயசூரியன் கூட்டணியும் சாவகச்சேரி நகரசபைக்கு கட்டுப்பணம் செலுத்தியது

உள்ளூராட்சித் தேர்தலில் சாவகச்சேரி நகரசபைக்குப் போட்டியிடுவதற்கு, உதயசூரியன் சின்னத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டணி, கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

அடுத்த கட்டம் குறித்து முடிவெடுக்க முடியாத நிலையில் ரெலோ

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான ஆசனப் பங்கீட்டுப் பேச்சுக்கள் தோல்வியடைந்ததை அடுத்து, தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்த ரெலோ, அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழ் தேசிய பேரவை என்ற பெயரில் புதிய கூட்டமைப்பை உருவாக்கியது தமிழ் காங்கிரஸ்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் நேற்று மற்றொரு புதிய அரசியல் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய பேரவை என்று பெயரில் இந்தப் புதிய அரசியல் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.