மேலும்

செய்தியாளர்: யாழ்ப்பாணச் செய்தியாளர்

யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு வீதம் குறைவு

உள்ளூராட்சி சபைகளுக்கு இன்று நடந்த தேர்தலில் வடக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரம், குறைந்தளவு வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

28 ஆண்டு கால ஆக்கிரமிப்பில் இருந்து பொன்னாலை – பருத்தித்துறை வீதிக்கு விடுதலை

28 ஆண்டுகளுக்குப் பின்னர், பொன்னாலை- பருத்தித்துறை வீதி பொதுமக்களின் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டு, நேற்று பருத்தித்துறைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

60 வீத நிதியை திருப்பி அனுப்பியது வடக்கு மாகாணம் – சிறிலங்கா அதிபர் குற்றச்சாட்டு

கடந்த ஆண்டு மீள்குடியமர்வுக்காக வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 60 வீதம் மீளத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை – கைவிரித்தார் சிறிலங்கா அதிபர்

காணாமல் போனோர் எவரையும் தம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கைவிரித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றங்களை மறந்து விடுங்கள் – என்கிறார் வடக்கு ஆளுனர்

சிறிலங்காவில் போரின் போது நடந்த குற்றங்களையெல்லாம் மறந்து விட வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

தமிழர்களிடம் மன்றாடுகிறார் மகிந்த

தன் மீது தமிழர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

சிவசக்தி ஆனந்தன் மீது சட்ட நடவடிக்கையில் இறங்குகிறது கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலா 2 கோடி ரூபா இலஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வன்முறைகளை தடுக்க வடக்கு, கிழக்கில் பாதுகாப்பு அதிகரிப்பு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும், ஆதரவாளர்களும், வேட்பாளர்களின் செயலகங்களும் தாக்கப்படும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ். விவசாயிகள் மானியம் கேட்கவில்லை- உத்தரவாத விலையையே கேட்கிறார்கள்

வடக்கிலுள்ள விவசாயிகள் மானியங்களைக் கோரவில்லை என்றும், தமது உற்பத்திகளுக்கு உத்தரவாத விலை ஒன்றையே அவர்கள் கோருகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன்.

சிறிலங்கா கடற்படை வாகனம் மோதி மாணவி பலி – புங்குடுதீவில் பதற்றம்

யாழ். தீவகத்தில் உள்ள புங்குடுதீவில், இன்று காலை சிறிலங்கா கடற்படையின் கவச வாகனம் மோதி, பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்தார்.