மோடியைச் சந்திக்க இந்தியா செல்கிறார் ரணில்
சிறிலங்காவின் புதிய பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, இந்த மாதம் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை் இந்தியாவுக்கு மேற்கொள்ளவுள்ளார்.
சிறிலங்காவின் புதிய பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, இந்த மாதம் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை் இந்தியாவுக்கு மேற்கொள்ளவுள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை தேர்தல்களில் தோற்கடிப்பதில் முக்கிய பங்காற்றியவரான முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
இந்தியாவின் கொல்கத்தா நகரின் மத்திய பகுதியில் உள்ள சாந்னிசௌக் பகுதியில், விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஆறு பேர், சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ரைம்ஸ் ஒவ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்குத் தொடர்பாக இந்திய மத்திய அரசிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ள இந்திய உச்சநீதிமன்றம், 7 பேரை ஏன் விடுவிக்கக் கூடாது என்பதற்கான மத்திய அரசின் வாதங்கள் தெளிவாக இல்லை என்றும் கூறியுள்ளது.
தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தையும், சிறிலங்காவின் தலைமன்னாரையும் இணைக்கும் தரைவழி மற்றும் தொடருந்துப் பாதை இணைப்பு விரைவில் சாத்தியமாகக் கூடும் என்று இந்திய மத்திய அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட யாகூப் மேமனுக்கு இன்று காலை 6.30 மணியளவில் நாக்பூர் சிறைச்சாலையில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரணதண்டனை ரத்துச் செய்யப்பட்டதற்கு எதிராக இந்திய மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை இந்திய உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு சற்று முன்னர் தள்ளுபடி செய்துள்ளது.
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், புகழ்பெற்ற விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே.அப்துல் கலாம் (வயது 84) சற்று முன்னர் காலமானார். மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சற்றுமுன்னர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்டோருக்கு கருணை காட்டக் கூடாது என்று, உச்சநீதிமன்றத்தில் இந்திய மத்திய அரசு நேற்றுத் தெரிவித்தது.
சிறிலங்காவுடனான உறவுகளில் சிறிலங்காவின் தேசிய நல்லிணக்கம் மற்றும் மீள்கட்டுமானம் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தப்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளது.