மேலும்

செய்தியாளர்: அ.எழிலரசன்

வேலூர் சிறையில் பேரறிவாளன் மீது கொலைவெறித் தாக்குதல் – படுகாயங்களுடன் தப்பினார்

ராஜிவ் காந்தி  கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், வேலூர் மத்திய சிறைச்சாலையில், வடமாநில ஆயுள் தண்டனை கைதி ஒருவர் இரும்புக்கம்பியால் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்தார்.

சென்னையில் இலங்கைத் தமிழ் அகதிகள் அமைதிப் பேரணி

தமக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் கோரியும், நாடு திரும்ப விரும்புவோருக்கான தண்டப்பணத்தை குறைக்க வேண்டும் என்று கோரியும் சென்னையில் நேற்று இலங்கை தமிழ் அகதிகள் அமைதிப் பேரணி ஒன்றை நடத்தினர்.

சிறிலங்காவுக்கு 16 திருவள்ளுவர் சிலைகள் – சென்னையில் அன்பளிப்பு

சிறிலங்காவில் உள்ள 16 கல்வி நிறுவனங்களில் நிறுவுவதற்காக 16 திருவள்ளுவர் சிலைகள் சென்னையில் நேற்று அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

மங்கள சமரவீரவைச் சந்திக்க இணங்குவாரா ஜெயலலிதா?

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசுவதற்கு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, கோரிக்கை விடுத்திருப்பதாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

விக்னேஸ்வரனுக்கு நன்றி தெரிவித்து ஜெயலலிதா கடிதம் – “விரைவில் சந்திப்போம்”

இலங்கைத் தமிழர்கள் உரிய நீதியைப் பெறும் வகையில் இந்திய அரசின் மூலம் தொடர்ந்து நடவடிக்கை எடுப்பேன் என்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அனுப்பியுள்ள நன்றிக் கடிதத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது – சிறிலங்காவுக்கு இந்தியா கண்டிப்பான அறிவுறுத்தல்

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் தாக்குதல் நடத்தக்கூடாது என்று சிறிலங்கா அரசுக்கு இந்தியா அறிவுறுத்தியுள்ளதாக, இந்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் தெரிவித்தார்.

ஆறாவது தடவையாக முதலமைச்சராகப் பதவியேற்றார் ஜெயலலிதா

தமிழ்நாடு முதலமைச்சராக- ஆறாவது தடவையாக, செல்வி ஜெயலலிதா இன்று நண்பகல் பதவியேற்றார். சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில், கோலாகலமாக நடந்த நிகழ்வில், மாநில ஆளுனர் ரோசய்யா முன்னிலையில், ஜெயலலிதா பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

இன்றும் மீண்டும் முதல்வராகப் பதவியேற்கிறார் ஜெயலலிதா – வாழ்த்த வருவாரா கருணாநிதி?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 134 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா, இன்று ஆறாவது தடவையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ளார்.

134 தொகுதிகளில் அதிமுக, 98 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி- மூன்றாம் அணி படுதோல்வி

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 134 தொகுதிகளைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. இதன் மூலம் மீண்டும் அதிமுக ஆட்சியமைக்கவுள்ள அதேவேளை பலமான எதிர்க்கட்சியாக திமுக சட்டமன்றத்துக்குள் நுழையவுள்ளது.

தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறார் ஜெயலலிதா

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இதுவரை வெளியாகியுள்ள முடிவுகள் மற்றும் முன்னணி நிலவரங்களின் அடிப்படையில், முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் நி்லையில் உள்ளது.