மிக் கொள்வனவு மோசடி- நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் கோட்டா முன்னிலை
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று முன்னிலையாகியுள்ளார்.
சிறிலங்கா விமானப்படைக்கு மிக் போர் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்ற மோசடி தொடர்பான விசாரணைகள் குறித்து, வாக்குமூலம் அளிப்பதற்காக, அவர் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் அழைக்கப்பட்டிருந்தார்.
இதற்கமைய அவர் இன்று காலை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
அதேவேளை, மிக் போர் விமானக் கொள்வனவு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக சிறிலங்காவின் முன்னாள் விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் ரொஷான் குணதிலகவிடமும் நேற்று நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் விசாரணை நடத்தப்பட்டது.
அவரிடம் ஐந்து மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
