மேலும்

சிறிலங்கா இராணுவத் தளபதியின் பதவிக்காலத்தை நீடிக்க சதித் திட்டம்

தற்போதைய சிறிங்கா  இராணுவத் தளபதியின் பதவிக்காலத்தை 2028 ஜனவரி வரை நீடிப்பதற்கான  சதித் திட்டத்தை  சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.

“தற்போதைய சிறிலங்கா  இராணுவத் தளபதி லெப். ஜெனரல் லசந்த ரொட்ரிகோவின் பதவிக்காலம் 2026 ஜூலை 2 ஆம் நாள் முடிவடைந்தது.

அவரது பதவிக்காலத்தை 2028 ஜனவரி வரை மேலும் நீடிப்பதற்கான ஒரு சூழ்ச்சி மேற்கொள்ளப்படுகிறது.

தற்போதைய இராணுவத் தளபதியின் பதவிக்காலத்தை நீடிக்கும்போது, ​​மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன உட்பட பல மூத்த இராணுவ அதிகாரிகள் புறக்கணிக்கப்படுவார்கள்.

2028ஆம் ஆண்டு இராணுவத் தளபதி பதவியை பொறுப்பேற்பவர் பெர்னாண்டோ என்ற குடும்பப்பெயர் கொண்ட ஒருவராக இருப்பார்.

கர்தினால் ரஞ்சித்தின் வேண்டுகோளைத் தொடர்ந்து இது செய்யப்படுகிறது.

சிறிலங்கா அரசாங்கத்தில் உள்ளவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மகாநாயக்க தேரர்களைச் சந்திக்கின்றனர். இருப்பினும், நியமனங்களில் கர்தினாலுக்கு செல்வாக்கு இருப்பதாகத் தெரிகிறது.

சிறிலங்கா இராணுவத் தளபதி மற்றும் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் போன்ற பதவிகளுக்கு நியமிக்கப்படுபவர்களை கர்தினாலே தீர்மானிக்கிறார்.

கர்தினால் ரஞ்சித் பாப்பரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், சிறிலங்கா மற்றொரு வத்திக்கானாக மாறியிருக்கும்,” என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்  சாமர சம்பத் தசநாயக்க மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *