என்பிபியின் வசமுள்ள கொழும்பு மாநகரசபை வரவுசெலவுத் திட்டம் தோல்வி
தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்ட முன்மொழிவு, 3 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.
கொழும்பு மாநகரசபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கான வாக்கெடுப்பு நேற்று நடத்தப்பட்டபோது, ஆதரவாக 57 வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் கிடைத்தன.
இது ஆளும்கட்சிக்கு எதிர்கொண்டுள்ள முக்கியமான பின்னடைவாக கருதப்படுகிறது.
எனினும், உள்ளூராட்சி கட்டளைச் சட்டத்தின்படி, கொழும்பு மாநகர சபை நிர்வாகம் 14 நாட்களுக்குள் புதிய வரவுசெலவுத் திட்ட முன்மொழிவை சமர்ப்பிக்க முடியும்.
அதுவும் தோற்கடிக்கப்பட்டால், வரவுசெலவுத் திட்டத்தை அங்கீகரிக்கும் அதிகாரம் உள்ளூராட்சி அமைச்சருக்கு உள்ளது.
