சுனாமியை விட டிட்வா புயலினால் மூன்று மடங்கு அதிக இழப்பு
டிட்வா புயலினால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு சுனாமியால் ஏற்பட்டதை விட மூன்று மடங்கு அதிகம் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி, தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஏற்பட்ட டிட்வா புயலினால், கிட்டத்தட்ட 6 முதல் 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை இழப்பு ஏற்பட்டிருக்கும் என முதற்கட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
இது ஒரு தோராயமான மதிப்பீடு மட்டுமே. பொருளாதார மீட்புத் திட்டத்தை வகுக்க சரியான பேரிடர் மதிப்பீடு பின்னர் மேற்கொள்ளப்படும்.
2004 ஆம் ஆண்டு சுனாமியினால் ஏற்பட்ட பொருளாதார சேதம் 1.5 முதல் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை மட்டுமேயாகும்.
ஆனால் இது சுனாமியால் ஏற்பட்ட சேதத்தை விட மூன்று மடங்கு அதிகம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
