மேலும்

முற்றிலும் சிங்களவர்களைக் கொண்ட தொல்பொருள் ஆலோசனை குழு நியமனம்

முற்றிலும் சிங்கள இனத்தவர்களைக் கொண்ட தொல்பொருள் ஆலோசனைக் குழுவை சிறிலங்கா அரசாங்கம் நியமித்துள்ளது.

புத்த சாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் பேராசிரியர ஹினிதும சுனில் செனவி, புதிய தொல்பொருள் ஆலோசனைக் குழுவை நியமிக்கும் சிறப்பு அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பொலன்னறுவை சோலோஸ்மஸ்தான ராஜமஹா விஹாரையின் தலைமை பீடமான மகா விஹாரவன்ஷிக ஷ்யாமோபலி மகா நிகாயவின் அஸ்கிரி மகா விஹாரப் பிரிவின் அனுநாயக்க தேரர், வண. வெண்டருவே தர்மகீர்த்தி சிறி ரத்தனபால உபாலி நாயக்க தேரர் தலைமை தலைமையிலான இந்தக் குழுவில்  பௌத்த பிக்குகள் மற்றும் துறைசார் வல்லுநர்கள் 19 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

2025 மார்ச் 10 ஆம் திகதி முதல் 2027 மார்ச் 09 வரை  இந்தக் குழுவின் பதவிக்காலம் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தொல்பொருள் ஆலோசனைக் குழுவில் தமிழர்கள், முஸ்லிம்கள் முற்றுமுழுதாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

2020ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இதுபோன்று முற்றிலும் சிங்களவர்களைக் கொண்டதாக தொல்பொருள் செயலணி நியமிக்கப்பட்டிருந்தது.

அதற்கு கடும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில் தற்போதைய அரசாங்கமும், முற்றிலும் சிங்களவர்களைக் கொண்ட தொல்பொருள் ஆலோசனைக் குழுவை நியமித்துள்ளது.

இந்தக் குழுவில்,

1.வண. வெண்டருவே தர்மகீர்த்தி சிறி ரத்தனபால உபாலி நாயக்க தேரர்.

2. வண. கலாநிதி பஹமுனே சிறி சுமங்கல நாயக்க தேரர்

3. வண. கலாநிதி கல்வெவ விமலகாந்த தேரர்

4. பேராசிரியர் பி.பி. மண்டாவல

5. பேராசிரியர் செனரத் திசாநாயக்க

6. பேராசிரியர் ஜகத் வீரசிங்க

7. பேராசிரியர் கருணாசேன ஹெட்டியாராச்சி.

9. பேராசிரியர் ஆர். எம். எம். சந்திரரத்ன

10. சிரேஷ்ட பேராசிரியர் மலிங்க அமரசிங்க

11. சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ

13. கலாநிதி ரோஸ் சோலங்க ஆராச்சி

14. கலாநிதி  சிறியானி ஹத்துருசிங்க,

15. கலாநிதி விஜேரத்ன பொஹிங்கமுவ

16. கலாநிதி பி.டி. நந்ததேவ

17. கலாநிதி காமினி விஜேசூரிய

18. கலாநிதி அருண ராஜபக்ஷ

19. ஹேமந்த குமார பாலச்சந்திர, ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *