சிறிலங்கா சுங்கத்திற்கு இலக்கை தாண்டி கொட்டும் வருமானம்
சிறிலங்கா சுங்கம், இந்த ஆண்டு எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தை- செப்ரெம்பர் மாதத்திலேயே எட்டி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்ரெம்பர் 30ஆம் திகதியுடன், நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்கு மேலாக, 117 சதவீத வருமானத்தை பெற முடிந்ததாக சிறிலங்கா சுங்க அதிகாரிகள் நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்துள்ளனர்.
எதிர்பார்க்கப்பட்ட சுங்க வருவாய் 1,485 பில்லியன் ரூபா என்றும், அந்த செப்ரெம்பர் 30ஆம் திகதிக்குள் 1,737 பில்லியன்ரூபா வருமானம் பெறப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
முந்தைய ஆண்டை விட, இந்த ஆண்டு ஒவ்வொரு மாதமும் சுங்க வருவாய் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
அதன்படி, ஒக்டோபர் 14, நிலவரப்படி, வாகன இறக்குமதி மூலம் அதிகபட்ச வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
இதன் மூலம், 587.11 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது, இது மொத்த வருவாயில் 37 சதவீதமாகும்.
ஒக்டோபர் 14 ஆம் திகதிக்குள், 55,447 மகிழுந்துகளும், 7,331 பாரஊர்திகள் மற்றும் போக்குவரத்து வாகனங்களும், இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
