டக்ளஸ் தேவானந்தா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது
ஈபிடிபியின் செயலாளர் நாயகமும்,முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திட்டமிட்ட குற்றக்குழுவின் தலைவராக மாகந்துரே மதுஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, கைப்பற்றப்பட்ட துப்பாக்கி ஒன்று தொடர்பாகவே, இந்த கைது இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
2001 ஆம் ஆண்டு டக்ளஸ் தேவானந்தாவுக்கு அவரது தனிப்பட்ட பாதுகாப்புக்காக சிறிலங்கா இராணுவத்தால் வழங்கப்பட்ட துப்பாக்கியே அது என தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட துப்பாக்கியின் வரிசை எண் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியின் எண்ணுடன் பொருந்தியிருந்தது.
இதகுறித்து டக்ளஸ் தேவானந்தாவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்திய போது, அந்த துப்பாக்கி எவ்வாறு காணாமல் போனது என்பது குறித்து திருப்திகரமான விளக்கத்தை வழங்கத் தவறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
