அபுதாபியில் இருந்த உதவிப் பொருட்களுடன் வந்தது 9வது விமானம்
சிறிலங்காவுக்கான பேரிடர் நிவாரணப் பொருட்களுடன், ஐக்கிய அரபு எமிரேட்சின் ஒன்பதாவது விமானம் நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
அபுதாபியிலிருந்து வந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானப்படைக்குச் சொந்தமான IL-76 போக்குவரத்து விமானம், நேற்று மாலை 4:47 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான 13,482 கிலோ கூடாரங்கள் மற்றும் பயண பாய்களுடன் இந்த விமானம் சிறிலங்கா வந்துள்ளது.
இந்த உதவிப் பொருட்களை சிறிலங்கா இராணுவ அதிகாரிகள், பேரிடர் முகாமைத்துவ மைய அதிகாரிகள் மற்றும் வெளியுறவு அமைச்சின் பிரதிநிதிகள் விமான நிலையத்தில் பொறுப்பேற்றுள்ளனர்.
