உதவிப்பொருட்களுடன் 2 விமானங்களில் அமெரிக்க படையினர் சிறிலங்கா வருகை
சிறிலங்காவில் இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான, உதவிப் பொருட்களுடன், அமெரிக்க விமானப்படையின் இரண்டு சி-130ஜே சூப்பர் ஹெர்குலஸ் விமானங்கள் இன்று காலை கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தை வந்தடைந்துள்ளன.
இந்த விமானங்களில், அமெரிக்க விமானப்படையின் 36வது அவசரகால மீட்புக் குழுவைச் சேர்ந்த விமானப்படை வீரர்களும், சிறிலங்கா வந்துள்ளனர்.
பேரிடர் முகாமைத்துவ மையத்தால் அடையாளம் காணப்பட்ட மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு – தங்குமிடப் பொருட்கள், தண்ணீர், சுகாதார உதவி, உணவு மற்றும் மருத்துவ உதவி – போன்ற அவசரகாலப் பொருட்களை நகர்த்துவதற்கு இந்த அமெரிக்க குழு சிறிலங்கா விமானப்படையுடன் இணைந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


