சீனாவை அடுத்து இந்தியா செல்கிறார் ரில்வின் சில்வா
ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரில்வின் சில்வா அடுத்த சில நாட்களுக்குள் இந்தியாவுக்குச் செல்ல உள்ளதாகவும், அந்தநாட்டு அதிகாரிகளுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.
அண்மையில் ரில்வின் சில்வா மூன்று வாரங்கள், சீனாவில் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் இந்தியப் பயணம் இடம்பெறவுள்ளது.
ரில்வின் சில்வா கடந்த காலங்களில் கடுமையான இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்த நிலையில் அவரது இந்தப் பயணம் முக்கியமானதாக கருதப்படுகிறது.
இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் அழைப்பின் பேரில் அவர் இந்தியா செல்கிறாரா அல்லது வேறு தரப்புகளின் அழைப்பின் பேரில் செல்கிறாரா என்பது குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
எனினும் அவரது இந்திய பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
