மேலும்

ஆண்டு: 2018

யாழ்ப்பாணத்தில் பிறப்பு வீதம் அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் 2017ஆம் ஆண்டு குழந்தைகள் பிறப்பு வீதம் அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த வாரம் நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு

மத்திய வங்கி பிணை முறி மோசடி விசாரணை அறிக்கை தொடர்பாக விவாதிக்க, சிறிலங்கா நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு இந்தவாரம் இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தலில் போட்டியிட நடிகையிடம் பாலியல் இலஞ்சம் கோரிய மகிந்தவின் கட்சி

மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன முன்னணியில் போட்டியிடுவதற்கு விண்ணப்பித்த நடிகை ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆசியாவின் பொருளாதாரக் கேந்திரமாக சிறிலங்காவை மாற்றுவதற்கு ஜப்பான் உதவும்

சிறிலங்காவை ஆசியாவின் பொருளாதாரக் கேந்திரமாக மாற்றுவதற்கு ஜப்பான் உதவும் என்று ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் தாரோ கோனோ தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அகதி முகாம்களில் மத்திய அரசு அதிகாரிகள் திடீர் ஆய்வு- மாநில அதிகாரிகளிடையே பதற்றம்

தமிழ்நாட்டில்  ஈழத்தமிழ் அகதிகள் தங்கியுள்ள முகாம்கள் சிலவற்றில், இந்திய மத்திய அரச அதிகாரிகள் குழுவொன்று திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளது. இதனால் மாநில அரச அதிகாரிகள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக, இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சாவகச்சேரியில் கூட்டமைப்பின் வேட்பாளர் தாக்கப்பட்டு படுகாயம்

சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காசிலிங்கம் சற்குணதேவன் என்ற வேட்பாளரே காயமடைந்தவராவார்.

சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திர நாள் நிகழ்வில் இளவரசர் எட்வேர்ட்

சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திர நாள் கொண்டாட்டங்களில் பிரதம விருந்தினரான பிரித்தானியாவின் இளவரசர் எட்வேர்ட் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முல்லைத்தீவில் கடற்படைத் தளம் அமைக்க 671 ஏக்கர் காணிகளை சுவீகரிக்க திட்டம்

முல்லைத்தீவில் சிறிலங்கா கடற்படைத் தளத்தை அமைப்பதற்கு  671 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அரசியல் கைதி ஒருவர் நீதிமன்றினால் விடுதலை

பாகிஸ்தான் தூதுவரை படுகொலை செய்யும் முயற்சியுடன் தொடர்புபட்டவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரை வழக்கில் இருந்து விடுவிக்க  கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

முல்லைத்தீவில் பரவும் காய்ச்சல் – அச்சமடையத் தேவையில்லை என்கிறார் மருத்துவ நிபுணர்

முல்லைத்தீவு பகுதியில் பரவி வரும் காய்ச்சல் குறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்று வடமாகாண சுகாதார அமைச்சின் சிறப்பு நிபுணர் மருத்துவ கலாநிதி ஆர்.கேசவன் தெரிவித்துள்ளார்.