மேலும்

Archives

சிறிலங்காவுடன் பரந்துபட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பை எதிர்பார்க்கும் பாகிஸ்தான் பிரதமர்

சிறிலங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில பாதுகாப்புத் துறையில் பரந்துபட்ட ஒத்துழைப்பும், நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதும் அவசியம் என்று பாகிஸ்தான் பிரதமர் சாஹிட் கான் அப்பாசி தெரிவித்துள்ளார்.

வவுனியா வளாகத்தில் புத்தர் சிலை வைக்கும் முயற்சியால் பதற்றம்

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் புத்தர் சிலை ஒன்றை நிறுவன சிங்கள மாணவர்கள் எடுத்த முயற்சியை அடுத்து. ஏற்பட்ட பதற்ற நிலையால், வவுனியா வளாகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.

இரணைதீவில் தங்கியிருந்து நிலமீட்புப் போராட்டம் நடத்தும் மக்கள்

சிறிலங்கா கடற்படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ள இரணைதீவில் உள்ள தமது பூர்வீக நிலங்களை விடுவித்து, மீளக்குடியேற அனுமதிக்கக் கோரி, இரணைதீவு மக்கள் நேற்று படகுகள் மூலம் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிறிலங்காவில் கடலில் மூழ்கும் தீவு – பேரலைகள் தோன்றக் காரணம் என்ன?

சிறிலங்காவுக்கு அருகே தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளதாலேயே கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு, உயரமான அலைகள் தோன்றுவதாகவும், சுனாமி ஆபத்து ஏற்படாது என்றும் சிறிலங்கா வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளார்.

உயர்மட்டப் பேச்சுக்களை நடத்த வாய்ப்புக் கிடைக்காமல் நாடு திரும்பும் சிறிலங்கா அதிபர்

கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கச் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முக்கிய நாடுகளின் உயர்மட்டத் தலைவர்களுடன் எந்த அதிகாரபூர்வ பேச்சுக்களையும் நடத்தாமலேயே நாடு திரும்பியுள்ளார்.

சிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சீனத் தூதுவர் பேச்சு

சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர்  செங் ஷியுவான், சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

‘தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் ஊடகர்களின் பங்கு’ – சுவிசில் நாளை வெளியீட்டு நிகழ்வு

தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் ஊடகர்களின் பங்கு  என்ற தலைப்பில் ஊடகவியலாளர் சண்.தவராசா எழுதிய – கட்டுரைகளின் தொகுப்பு நூல் நாளை சுவிஸ் – பேர்ண் நகரில் வெளியிடப்படவுள்ளது.

சிறிலங்கா கடற்படையில் புதிதாக இணைந்தது ‘சிந்துரால’ போர்க்கப்பல்

இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட ஆழ்கடல் ரோந்துக் கப்பலான ‘எஸ்எல்என்எஸ் சிந்துரால’ (பி-624 ) நேற்று சிறிலங்கா கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டது.

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு யார் காரணம்?

சிறிலங்காவில் 1983ல் இடம்பெற்ற ‘கறுப்பு ஜூலை’ கலவரத்தின் போது சிறிலங்கா அரசாங்கத்தால் தலைமை தாங்கப்பட்ட சிங்களக் காடையர்கள் மற்றும் சிங்கள அடிவருடிகளால் பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்கள் காரணமாக இன மோதல்களைக் கைவிட்டு நாட்டில் அமைதியை ஏற்படுத்த வேண்டிய நிலை சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஏற்பட்டது.

கொழும்புத் துறைமுகத்தில் ரஷ்ய கடற்படைக் கப்பல்

ரஷ்ய கடற்படையின் பயிற்சிக் கப்பலாக ‘Perekop’ நல்லெண்ணப் பயணமாக நேற்று முன்தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்தக் கப்பலுக்கு கடற்படையின் மரபுகளுக்கு அமைய, சிறிலங்கா கடற்படையினர் வரவேற்பு அளித்தனர்.