சிறிலங்கா வான்பரப்பில் பறந்த ஒளிரும் மர்மப்பொருள்
சிறிலங்காவின் வான்பரப்பில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் ஒன்று நேற்றிரவு பல்வேறு பகுதிகளிலும் அவதானிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவின் வான்பரப்பில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் ஒன்று நேற்றிரவு பல்வேறு பகுதிகளிலும் அவதானிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் உதவியுடன் அம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது உள்ளிட்ட தென்மாகாணத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரும் ஜனவரி 7ஆம் நாள் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
அம்பாந்தோட்டையில் சிறப்பு பொருளாதார வலயத்தை உருவாக்குவதற்கு சீனாவுக்கு வழங்கப்படவுள்ள 15 ஆயிரம் ஏக்கர் காணிகளில், 90 – 95 வீதமான காணிகள், அரச காணிகளே என்று சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக, அபிவிருத்தி மூலோபாய அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திடம் கையளிப்பது தொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு விரைவில் இறுதிப்படுத்தப்படும் என்று சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக மற்றும் அபிவிருத்தி மூலோபாய அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்தார்.
வவுனியாவில் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் தூதரக சேவை பணியகத்தை (கொன்சூலர்) யாழ்ப்பாணத்துக்கு மாற்றுவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
தனது கைவிரலைக் கெட்டியாக பிடித்துக் கொண்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளரிடம் இருந்து தப்பித்துக் கொள்ளவே அவரைச் சும்மா தள்ளி விட்டேன் என்று தெரிவித்திருக்கிறார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.
ஜனவரி 8ஆம் நாள் நடந்த அமைதிப் புரட்சி தடம் புரள்வதற்கு தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் நேற்று முன்தினம் நடந்த போர்வீரர்கள் நினைவு அணிவகுப்பின் போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் மீது கல் வீசத் திட்டமிட்டார் என்ற சந்தேகத்தில் இரண்டு கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தறையில் நேற்று நடத்தப்பட்ட சிறிலங்காவின் படை வலிமையை வெளிப்படுத்தும் இராணுவ அணிவகுப்பில், சிறிலங்கா விமானப்படையிடம் உள்ள மிக் போர் விமானங்கள் இடம்பெறவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய பாதுகாப்புக்கான சகல நடவடிக்கைகளும் தமது அரசாங்கத்தினால், முன்னெடுக்கப்படும் என்றும், பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு இடமளிக்கப்படாது என்றும் உறுதியளித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.