மேலும்

Tag Archives: மகிந்த ராஜபக்ச

முட்டாள்தனம் செய்து விட்டார் மகிந்த –  கோமின் தயாசிறி

மைத்திரிபால சிறிசேன ஒக்ரோபர் 26 ஆம் நாள் வழங்கிய பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டதன் மூலம், மகிந்த ராஜபக்ச பாரிய முட்டாள்தனமான காரியத்தை செய்து விட்டார் என்று ராஜபக்ச விசுவாசியான, சட்டநிபுணர் கோமின் தயாசிறி தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு நீதிமன்றம் தடை – கொமன்வெல்த் வரலாற்றில் முதல் முறை

கொமன்வெல்த் வரலாற்றில், முதல் முறையாக பிரதமர் ஒருவர் செயற்படுவதற்கு நீதிமன்றம் ஒன்று, இடைக்கால தடை உத்தரவு விதித்துள்ளது என்று சட்டவாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இடைக்காலத் தடைக்கு எதிராக நாளை உச்சநீதிமன்றில் முறையீடு செய்கிறார் மகிந்த

சிறிலங்கா பிரதமராகச் செயற்படுவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று விதித்துள்ள இடைக்காலத் தடை உத்தரவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் நாளை மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்யவுள்ளதாக, மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இப்படியும் குத்துக்கரணம் அடிக்கிறார் மைத்திரி

ராஜபக்சவினரால் தனது உயிருக்கு ஆபத்து இருந்தது என்று தேர்தல் மேடையைக் கவருவதற்காக, கூறிய கட்டுக்கதையே என்று கூறியிருக்கிறார் சிறிலங்காவின் அதிபர் மைத்திரிபால சிறிசேன.

மகிந்தவுக்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்தும் பிரேரணை மீது விவாதம் ஆரம்பம்

மகிந்த ராஜபக்சவின், சிறிலங்கா  பிரதமர் செயலகத்துக்கான நிதியை இடைநிறுத்தும்  பிரேரணை இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு,  விவாதம் நடத்தப்பட்டு வருகிறது.

மகிந்தவின் நிதி ஒதுக்கீடுகளை வெட்டும் பிரேரணை மீது நாளை வாக்கெடுப்பு

நாளைய நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்பதா என்பது தொடர்பாக சிறிலங்காவில் ஆளும்கட்சி இன்னமும் முடிவு செய்யவில்லை என்று அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

தடைகளை விதிக்கும் முடிவை இன்னமும் எடுக்கவில்லை – ஐரோப்பிய ஒன்றியம்

சிறிலங்காவில் உள்ள தனி நபர்களை வைத்து தடைகளை விதிப்பது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று ஐரோப்பிய ஒன்றிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அரச நிறுவனங்களைப் பிடித்த மோசடியாளர்கள் – மைத்திரிக்கு தலைவலி

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றம்சாட்டப்பட்ட சிலர் அண்மையில், முக்கிய அரச நிறுவனங்களின் தலைவர்களாக நியமிக்கப்பட்ட விவகாரம் சிறிலங்கா அதிபருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

மகிந்தவுக்கு ‘செக்’ வைக்கும் ஐதேக – புதிய வியூகம்

சிறிலங்காவின் சர்ச்சைக்குரிய பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக மறுத்து வரும் நிலையிலும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அவரை பதவிநீக்க மறுத்து வரும் நிலையிலும், பிரதமர் செயலகத்தை செயற்பட விடாமல் முடக்கும் புதிய நகர்வு ஒன்றில் ஐக்கிய தேசியக் கட்சி இறங்கியுள்ளது.

இன்று மீண்டும் பெரும்பான்மையை நிரூபிப்போம் – ஐதேக

நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு  மீண்டும் கூடும் போது, தமது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கப் போவதாக, ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.