150 பிக்குகள் போட்டியிடுவதால் தேர்தல் திணைக்களத்துக்கு நெருக்கடி
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 150இற்கும் அதிகமான பௌத்த பிக்குகளும் போட்டியில் இறங்கியுள்ளதால், வாக்களிப்பு நிலையங்களை அமைப்பதில் தேர்தல்கள் திணைக்களத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 150இற்கும் அதிகமான பௌத்த பிக்குகளும் போட்டியில் இறங்கியுள்ளதால், வாக்களிப்பு நிலையங்களை அமைப்பதில் தேர்தல்கள் திணைக்களத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு நடைபெறவுள்ள தேர்தலில் இம்முறை மிக நீளமான வாக்குச்சீட்டு மட்டக்களப்பு மாவட்டத்துக்கே அச்சிடப்படவுள்ளது. அடுத்தமாதம் 17ஆம் நாள் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகளில் தேர்தல்கள் திணைக்களம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த செவ்வாய்க்கிழமை மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக வெளியிட்ட கருத்தை, இலத்திரனியல் ஊடகங்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்புவதற்கு தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தடைவிதித்துள்ளார்.
சிறிலங்காவில் வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைக் கண்காணிக்க மூன்று வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் வரவுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் குழுத் தலைவராக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளதாக, கூட்டணியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தினேஸ் குணவர்த்தன அறிவித்துள்ளார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அதன் கை சின்னத்தில் போட்டியிடுவது குறித்து, தீவிரமான உள்ளக கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களிடம் இருந்து கட்டுப்பணம் ஏற்றுக் கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாக சிறிலங்கா தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவில் வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் வரும் ஜூலை 3ஆம் நாள் தொடக்கம் ஏற்றுக் கொள்ளப்படும் என்று சிறிலங்கா தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
தேர்தல் முறையை மாற்றியமைக்கும் 20ஆவது திருத்தச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் வரையில், நாடாளுமன்றம் கலைக்கப்படாது என்று சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை இன்னும் 15- 20 ஆண்டுகளுக்கு, ஒன்பதை விடவும் குறைக்கப்படாமல் இருப்பதை, புதிய தேர்தல் முறை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.