மகிந்த அணியின் இரட்டை வேடம் அம்பலம் – மேற்குலகுடன் இரகசிய பேரம்
மேற்குலக நாடுகளின் தூதுவர்களுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இரகசியப் பேச்சுக்களை நடத்தியுள்ளது.
மேற்குலக நாடுகளின் தூதுவர்களுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இரகசியப் பேச்சுக்களை நடத்தியுள்ளது.
சர்ச்சைக்குரிய பிரதமர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்துக்கு இதுவரை அனைத்துலக அங்கீகாரம் கிடைக்காத நிலையில், சிறிலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்தவர்கள், அனைத்துலக ஆதரவைப் பெறுவதற்கான இரகசியப் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராக இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யும் முயற்சிகள் இடம்பெற்று வரும் நிலையில், வடக்கில் தமிழ் அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளில் முழுவீச்சில் இறங்கியுள்ளன.
மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிப்பதற்கு, 113 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையிலேயே சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைக்கும் முடிவை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எடுத்தார் என்று சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அரசியல் கைதிகளை விடுவிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவும் தயாராக இருப்பதாகவும், இதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது இராணுவத்தின் பொறுப்பு அல்ல என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் வெளியிட்ட நான்கு தெரிவுகளில் நான்காவதாக குறிப்பிட்ட தெரிவே மிகச் சிறந்தது என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
“உடனடியாக ஒரு புதிய கட்சியை ஆரம்பிக்க நான் நினைக்கவில்லை. புதிய கட்சியை தொடங்குவது எனது வயதில் மிகவும் இலகுவானதாக இருக்காது இது கலந்துரையாடல்களாகத் தான் சென்று கொண்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வெளியிடங்களைச் சேர்ந்தவர்களைக் குடியேற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாf, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுமத்திய குற்றம்சாட்டை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.
பலாலி விமான நிலையத்தை இந்தியாவின் உதவியுடன், பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பாக, எதிர்வரும் ஜூலை 10ஆம் நாள், நேரில் வந்து ஆராய்வதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.