ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – கூட்டு எதிரணி முடிவு
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு கூட்டு எதிரணி முடிவு செய்துள்ளது.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு கூட்டு எதிரணி முடிவு செய்துள்ளது.
சிறிலங்காவில் உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன முன்னணி வெற்றி பெற்றதையடுத்து, அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 1.18 ரூபாவினால் (0.76 வீதம்) வீழ்ச்சி கண்டுள்ளது.
சிறிலங்காவில் கடந்தவாரம் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளில், 24 பள்ளிவாசல்கள், 445 வீடுகள் மற்றும் வாணிபங்கள் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
கண்டியில் இன வன்முறைகளைத் தூண்டி விட்டதாக குற்றம்சாட்டப்படும், மகாசோன் பலகாயவின் பணியகத்தில் நேற்று நடத்தப்பட்ட தேடுதலின் போது, பெற்றோல் குண்டுகள், வன்முறைகளைத் தூண்டும் பிரசுரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சிறிலங்காவில் முஸ்லிம்களை இலக்கு வைத்த தாக்குதல்கள் ஆங்காங்கே இன்னமும் தொடர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கண்டி மாவட்டத்தில் இன்று ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என்று சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்டத்தில் முப்படைகளையும் சேர்ந்த 3000இற்கும் அதிகமானோர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.
இன வன்முறைகளால் பாதிக்கப்பட்ட கண்டி மாவட்டத்தில் நேற்று ஒரு சிறிய தாக்குதல் சம்பவம் மாத்திரமே இடம்பெற்றதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்டத்தில் பாதுகாப்பைப் பலப்படுத்த முப்படையினரும் பணியில் அமர்த்தப்பட்டுள்ள அதேவேளை, சிறிலங்கா படையினருக்கும் காவல்துறையினருக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை மேற்கொள்வதற்கான அதிகாரியாக மேஜர் ஜெனரல் ருக்மன் டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கண்டி மாவட்டத்தில் நேற்று நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று காலை 10 மணியுடன் நீக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை அறிவித்துள்ளது.