ஜெனிவா வாக்குறுதிகளை சிறிலங்கா அவசரமாக நிறைவேற்ற வேண்டும் – ஜேர்மனி
ஜெனிவாவில் 2015இல் சிறிலங்கா அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதற்கு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம் இது என்று ஜேர்மனி தெரிவித்துள்ளது.
ஜெனிவாவில் 2015இல் சிறிலங்கா அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதற்கு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம் இது என்று ஜேர்மனி தெரிவித்துள்ளது.
சிறிலங்காவுடனான 60 ஆண்டுகால உறவுகளை பலப்படுத்தும் வகையில், சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவவும், அதன் சுதந்திரம் மற்றும் இறைமையைப் பாதுகாக்கவும் சீனா கடமைப்பட்டுள்ளது என்று சீனாவின் உயர் அரசியல் ஆலோசகர் உறுதியளித்துள்ளார்.
ஐ.நாவுடன் தொடர்புடைய அமைப்புகளின் உதவியுடன் சந்திரிகா குமாரதுங்க மற்றும் மனோ கணேசன் உள்ளிட்டோரால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க விழிப்புணர்வுத் திட்டங்களைக் குழப்பும் உத்தரவு ஒன்று சிறிலங்கா பிரதமரால் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்பதை விட, தமது எதிர்காலம் தொடர்பாகவே தமிழ் மக்கள் அதிக கரிசனை கொண்டுள்ளனர் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு நேற்று கொழும்பில் கூடி அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்துக் கலந்துரையாடியது.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பு யோசனை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள உப குழுக்களின் அறிக்கைகள் தொடர்பாக அடுத்தவாரம் நடத்தப்படவிருந்த விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்பு தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வரும் ஜனவரி மாதம் மூன்று நாட்கள் விவாதம் நடத்தப்படவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவுக்கான தென்னாபிரிக்கத் தூதுவர் ரொபினா மார்க்ஸ், எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
புதிய அரசியலமைப்புத் தொடர்பான மக்கள் கருத்தறியும் பொதுவாக்கெடுப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்படவுள்ளதாக, சிறிலங்கா அரசாங்க உட்தரப்புத் தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு புதிய அரசியலமைப்பையே அறிமுகப்படுத்துமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.