மகிந்தவின் கனவுக்கு ஆப்பு வைத்தார் மைத்திரி
வெற்றிலைச் சின்னத்தில், பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை அனுமதிக்க முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
வெற்றிலைச் சின்னத்தில், பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை அனுமதிக்க முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் அடுத்த ஓரிரு மாதங்களுக்குள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தாம் போட்டியிடப் போவதாக, முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தனக்கு நெருக்கமானவர்களிடம் உறுதிப்படுத்தியிருக்கிறார். இந்த தகவலை சீன செய்தி நிறுவனமான சின்ஹூவா வெளியிட்டுள்ளது.
மீண்டும் அரசியலில் குதிக்கத் தயாராகி வரும், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நிழல் அமைச்சரவை ஒன்றை நியமித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிழல் அமைச்சரவையில் 5 முன்னாள் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவோ எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்களோ கூறுவதுபோல, வடக்கில் எங்குமே, கடந்த மே 18ம் நாள் புலிக்கொடி பறக்கவிடப்படவில்லை என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.
புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் சடலத்தின் மீது இனவாத அரசியல் ஆதாயம் தேடும் கேவலமான முயற்சியில், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இறங்கியுள்ளதாக, நீதியமைச்சர் விஜேயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் குறித்து சிறிலங்கா காவல்துறையினர் கவனமாக இருக்க வேண்டும் என்றும், முன்னரும் இதுபோன்ற செயற்பாடுகள் தான் விடுதலைப் புலிகள் எழுச்சி பெறக் காரணமாக அமைந்தது என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.
மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாகவும் அதிபராகப் போட்டியிடலாம் எனத் தீர்ப்பு வழங்கிய அதே உச்சநீதிமன்றமே தற்போது கோத்தபாய ராஜபக்சவைப் பாதுகாத்துள்ளது.
போர் வெற்றிக் கொண்டாட்டங்களை சீர்குலைத்தமைக்காக சிறிலங்கா அரசாங்கம் வெட்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றி கொள்ளப்பட்டதை நினைவு கூரும் வகையில், போர்வீரர்கள் ஞாபகார்த்த அணிவகுப்பு எதிர்வரும் 19ம் நாள் மாத்தறையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வழமையாக, புதிய அதிபர் ஒருவர் பொறுப்பேற்கும் போது முன்னாள் அதிபரின் மெய்ப்பாதுகாவலர்களுக்குப் பதிலாக தனக்கு விசுவாசமானவர்களை நியமிப்பது வழமையாகும். ஆனால் அதிபர் மைத்திரிபால சிறிசேன நடைமுறைக்கு எதிராகச் செயற்பட்டிருந்தார்.