மேலும்

Tag Archives: கோத்தாபய ராஜபக்ச

அடுத்த அதிபர் தேர்தலில் போட்டி – கோத்தா சூசகமான பதில்

சிறிலங்காவின் அடுத்த அதிபர் தேர்தலில் தான் போட்டியிடுவதா- இல்லையா என்பதை மக்களே தீர்மானிப்பார்கள் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா மக்களின் வரிப்பணத்தை அமெரிக்காவில் இருந்தபடி ஏப்பம்விட்ட கோத்தாவின் மகன்

அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில், தூதரகப் பணியகத்துக்காக வாடகைக்குப் பெறப்பட்ட வீட்டில், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் மகனே தங்கியிருந்தார் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இராணுவப் புரட்சி என்று படையிரைக் கேவலப்படுத்தாதீர் – எதிரணியிடம் எஸ்.பி. திசநாயக்க கோரிக்கை

இராணுவப் புரட்சிக்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறி, சிறிலங்கா படையினரை கேவலப்படுத்த வேண்டாம் என்று கூட்டு எதிரணியினரிடம் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க.

வட,கிழக்கின் முன்னாள் இராணுவ ஆளுனர்கள் எழுதிய நூலை வெளியிட்டார் மகிந்த

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆளுனர்களாக இருந்த முன்னாள் படை அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, மற்றும் றியர் அட்மிரல் மொகான் விஜேவிக்கிரம ஆகியோர் இணைந்து எழுதிய நூலை, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று வெளியிட்டு வைத்தார்.

ட்ரம்பின் வெற்றியை சிங்களவர்கள் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் – கோத்தா

அமெரிக்காவில் பெரும்பான்மையின மக்கள், டொனால்ட் ட்ரம்பின் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளதை, சிறிலங்காவின் பெரும்பான்மையின சிங்களவர்கள் ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஆவா குழுவை உருவாக்க வேண்டிய தேவை இராணுவத்துக்கு இல்லையாம் – கோத்தா கூறுகிறார்

சிறிலங்கா இராணுவமோ, இராணுவப் புலனாய்வுப் பிரிவோ, ஆவா குழு போன்ற குழுக்களை உருவாக்க வேண்டிய காரணம் ஏதும் இல்லை என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச குடும்பத்தை அதிர்ச்சியில் உறைய வைத்த யோசிதவின் கைது – படங்கள்

நிதி மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் அதிபர் யோசித ராஜபக்ச நேற்று மாலை கடுவெல நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது, ராஜபக்ச குடும்பத்தினர் கலக்கத்துடன் ஒன்று குவிந்திருந்தனர்.

கோத்தாவிடம் நேற்று 7 மணிநேரம் விசாரணை – இன்றும் தொடரும்

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவிடம், நேற்று ஏழு மணிநேரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட அதேவேளை,  இன்றும் இந்த விசாரணை தொடரவுள்ளது.

கோத்தாவைக் காப்பாற்ற பொய்ச்சாட்சி சொன்ன மேஜர் ஜெனரலுக்கு பிணை

கோத்தாபய ராஜபக்சவைக் காப்பாற்ற பொய்ச்சாட்சியம் அளித்த மேஜர் ஜெனரல் காமினி ஜெயசுந்தரவை பிணையில் செல்ல கொழும்பு பிரதம நீதிவான் கிகன் பிலபிட்டிய அனுமதித்துள்ளார்.

கோத்தாவுக்காக பொய்ச்சாட்சியம் அளித்த மேஜர் ஜெனரலுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

அதிபர் ஆணைக்குழுவின் முன்பாக பொய்ச்சாட்சியம் அளித்த ரக்ன லங்கா பாதுகாப்பு சேவையின் பொது முகாமையாளரும், சிறிலங்கா இராணுவ முன்னாள் அதிகாரியுமான மேஜர் ஜெனரல் காமினி ஜெயசுந்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.