மேலும்

Tag Archives: உள்ளூராட்சித் தேர்தல்

ரோசி சேனநாயக்கவை கொழும்பு மாநகர முதல்வர் வேட்பாளராக நிறுத்துகிறது ஐதேக

கொழும்பு மாநகரசபைத் தேர்தலில், முதல்வர் வேட்பாளராக ரோசி சேனநாயக்கவை களமிறக்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது.

ஜனவரி 27 இல் உள்ளூராட்சித் தேர்தல் – அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் முடிவு

உள்ளூராட்சித் தேர்தலை வரும் ஜனவரி 27ஆம் நாள் நடத்துவதற்கு, நேற்று நடந்த அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக சிறிலங்கா பிரதமர் தலைமையில் நேற்று அரசியல் கட்சிகளுடன் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

உள்ளூராட்சித் தேர்தலுக்கான அனைத்து தடைகளும் நீங்கின

உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதற்கு இருந்த கடைசியான தடைகளும் நேற்றுடன் நீக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மூன்று சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டன.

ஜனவரி 20இல் உள்ளூராட்சித் தேர்தல்?

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் ஜனவரி 20ஆம் நாள் அல்லது அதனை அண்டிய ஒரு நாளில் நடத்தப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக சிறிலங்கா அமைச்சரும் நாடாளுமன்ற அவை முதல்வருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

ஜனவரியிலேயே உள்ளூராட்சித் தேர்தல் – மாகாணசபைத் தேர்தல் எப்போது?

உள்ளூராட்சித் தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குப் பின்னரே நடத்தப்படும் என்றும், மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தில்  தீர்மானிக்க முடியும் என்றும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனவரி 20க்குப் பின்னரே உள்ளூராட்சித் தேர்தல் – மகிந்த தேசப்பிரிய

உள்ளூராட்சித் தேர்தல் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் நாளுக்குப் பின்னரே நடத்தப்படக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக சிறிலங்காவின் தேர்தல்கள்ஆணைக்குழு  தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரி்வித்தார்.

ஜனவரியிலேயே உள்ளூராட்சித் தேர்தல்

உள்ளூராட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு ஒக்ரோபர் மாதம் வெளியிடப்பட்டு, ஜனவரி மாத இறுதியில் தேர்தல்கள் நடத்தப்படும் என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

டிசெம்பரில் உள்ளூராட்சித் தேர்தல் நடத்த பரீட்சை ஆணையாளர் எதிர்ப்பு

வரும் டிசெம்பர் மாதத்தில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்தினால், கபொத சாதாரண தரப் பரீட்சைகள் பாதிக்கப்படும் என்று சிறிலங்காவின் பரீட்சைகள் ஆணையாளர் புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடுவதற்காக பதவி விலகிய அரச பணியாளர்கள் அதே பதவியை பெற முடியாது

தேர்தலில் போட்டியிடுவதற்காக அரச சேவையில் இருந்து விலகிக் கொள்வோர் மீண்டும் அதே பதவியைப் பெற முடியாது என்று சிறிலங்காவின் பொதுநிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

துப்பாக்கிகளால் ஆட்சியைக் கவிழ்க்க முடியாது- மகிந்த அமரவீர

துப்பாக்கிகளைப் பயன்படுத்தி, அரசாங்கத்தைக் கவிழ்க்க முடியாது என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலரும், சிறிலங்கா அமைச்சருமான மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.