மேலும்

Tag Archives: உள்ளூராட்சித் தேர்தல்

தேர்தல் முடியும் வரை அரச நியமனங்களை இடைநிறுத்த உத்தரவு

உள்ளூராட்சித் தேர்தல் முடியும் வரைக்கு அரசாங்க நியமனங்கள் வழங்கப்படுவதை இடைநிறுத்துமாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டம் நிறைவேறியது

உள்ளூராட்சித் தேர்தல்கள் கட்டளைத் திருத்தச் சட்டம் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல உறுப்பினர் வட்டாரங்களுக்கான நியமனங்கள் தொடர்பாக, தமிழ், சிங்கள வரைவுகளுக்கிடையில் உள்ள வேறுபாடுகளை களையும் வகையில், இந்த திருத்தச்சட்டம் முன்வைக்கப்பட்டது.

பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான கூட்டம் இன்றும் தொடரும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான ஆசனப் பங்கீட்டுப் பேச்சுக்கள்  இன்றும் நாளையும் தொடர்ந்து இடம்பெறும் என்று தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலர் துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

பெப்ரவரி 17இற்கு முன் உள்ளூராட்சித் தேர்தல் – மகிந்த தேசப்பிரிய

உள்ளூராட்சித் தேர்தல்கள் வரும் பெப்ரவரி 17ஆம் நாள் அல்லது அதற்கு முன்னதாக நடத்தப்படும் என்று சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஆனந்தசங்கரியுடனான கூட்டு தற்காலிக ஏற்பாடு தான் – சுரேஸ் பிரேமச்சந்திரன்

உள்ளூராட்சித் தேர்தல் தேசிய அளவில் முக்கியத்துவமற்றது என்றும், இந்தத் தேர்தலில், ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிடும் தமது முடிவு தற்காலிக ஏற்பாடு தான் என்றும் ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

பெப்வரி 10 இல் உள்ளூராட்சித் தேர்தல்?

வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பின்னரே, உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறும் நாள் தேர்தல் ஆணையத்தினால் அறிவிக்கப்படும் என்று, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.முகமட் தெரிவித்துள்ளார்.

வர்த்தமானிக்கு இடைக்காலத் தடை – தேர்தல்கள் ஆணைய தலைவர் கருத்து வெளியிட மறுப்பு

உள்ளூராட்சி சபைகளின் எல்லைகள் தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு, மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளமை தொடர்பாக கருத்து வெளியிடுவதற்கு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய மறுப்புத் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் தமிழ் அரசுக் கட்சியின் முக்கிய கூட்டம்

சிறிலங்காவில் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு வவுனியாவில்  கூடி ஆலோசனைகளை நடத்தியுள்ளது.

வரும் 27ஆம் நாளுக்குப் பின்னர் வெளியாகிறது உள்ளூராட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களைக் கோரும் அறிவிப்பு வரும் நொவம்பர் 27ஆம் நாளுக்குப் பின்னர் வெளியிடப்படும் என்று சிறிலங்கா தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தாமரை மொட்டுக்குத் தலைமையேற்கிறார் மகிந்த – அனுராதபுரவில் முதல் பரப்புரைக் கூட்டம்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் தலைமையில் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகள் ஆரம்பமாகவுள்ளன.