மேலும்

பிரிவு: செய்திகள்

ஐ.நா முன்மொழிந்துள்ள கலப்பு நீதிமன்ற விசாரணை – தமிழர் தரப்பின் கருத்து என்ன?

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்னகள் தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் தெரிவித்துள்ளனர்.

போர்க்குற்றவாளிகளின் பெயர்கள் அறிக்கையில் இருந்து நீக்கப்பட்டதா?

சிறிலங்கா தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கையில், போர்க்குற்றவாளிகள் எவரது பெயர்களும் உள்ளக்கப்படவில்லை, இந்தநிலையில் ஏற்கனவே அதில் இடம்பெற்றிருந்த பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.

இனப்படுகொலைகள் இடம்பெற்றதாக தெரியவரவில்லை – ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

சிறிலங்காவில் இனப்படுகொலைகள் இடம்பெற்றதாக இப்போது தாம் கருதவில்லை என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தை ஏற்க முடியாது – சிறிலங்கா அமைச்சர்

போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய சிறப்பு கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரையை ஏற்க முடியாது என்றும் சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஐ.நா அறிக்கையை வரவேற்கிறது பிரித்தானியா

சிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையை வரவேற்றுள்ள பிரித்தானியா, இந்த அறிக்கையின் பரிந்துரைகளை உன்னிப்பாக ஆராயப் போவதாக தெரிவித்துள்ளது.

ஐ.நா விசாரணை அறிக்கையின் சுருக்கம் – முழுமையாக

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா நடத்திய விசாரணை அறிக்கை இரண்டு பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் அறிக்கையின் சுருக்கம், ஆங்கிலத்தில் 19 பக்கங்களில் இடம்பெற்றுள்ளது. இரண்டாவது பகுதி 261 பக்கங்களில் உள்ளது.

போர்க்குற்றங்களை விசாரிக்க அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய சிறப்பு நீதிமன்றம்- ஐ.நா பரிந்துரை

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க அனைத்துலக நீதிபதிகள், சட்டவாளர்கள், விசாரணையாளர்களை உள்ளடக்கிய சிறப்பு கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று ஐ.நா அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவை அனைத்துலக நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துக: நாடுகடந்த தமிழீழ அரசவையில் தீர்மானம்

சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கோ அல்லது அதனையொத்த அனைத்துலக நீதி பரிபாலனத்திற்கோ பாரப்படுத்த, ஐ.நா பாதுகாப்பு சபைக்குப் பரிந்துரை செய்யும்படி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளிடம்  கோரும் தீர்மானம் ஒன்றை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது.

பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐ.நா விசாரணை அறிக்கை இன்று வெளியாகிறது

சிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணைகளின் அறிக்கை இன்று பகிரங்கமாக வெளியிடப்படவுள்ளது.

தலைமன்னார்- இராமேஸ்வரம் தரைப்பாலம் குறித்து ரணிலுடன் இந்திய அமைச்சர் பேச்சு

தலைமன்னாரையும் இராமேஸ்வரத்தையும் இணைக்கும் தரைவழிப் பாலத்தை அமைப்பது தொடர்பாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், இந்திய மத்திய தரைவழிப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்கரி பேச்சுக்களை நடத்தியுள்ளார்.