மேலும்

செய்தியாளர்: Vanni

கேப்பாப்புலவில் 133.34 ஏக்கர் காணிகளை விடுவித்தது சிறிலங்கா இராணுவம்

முல்லைத்தீவு- கேப்பாப்புலவில், சிறிலங்கா படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த 85 குடும்பங்களுக்குச் சொந்தமான 133.34 ஏக்கர் காணிகள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளன.

உள்ளூராட்சித் தேர்தல் – வவுனியாவில் 12 அரசியல் கட்சிகள், 4 சுயேட்சைக் குழுக்கள் களத்தில்

வவுனியா மாவட்டத்தில் 5 உள்ளூராட்சி சபைகளுக்கு வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் 12 அரசியல் கட்சிகளும், 4 சுயேட்சைக் குழுக்களும் போட்டியில் குதித்துள்ளன.

உள்ளூராட்சித் தேர்தல் – மன்னாரில் 5 சபைகளுக்கு 11 கட்சிகள், 1 சுயேட்சைக் குழு போட்டி

வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில்,  மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி சபைகளுக்கும், 11 அரசியல் கட்சிகளும் ஒரு சுயேட்சைக் குழுவும் போட்டியிடுகின்றன.

உள்ளூராட்சித் தேர்தல் – முல்லைத்தீவு களத்தில் 11 அரசியல் கட்சிகள், 3 சுயேட்சைக் குழுக்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள  4 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றுவதற்காக, 11 அரசியல் கட்சிகளும், 3 சுயேட்சைக் குழுக்களும் களத்தில் இறங்கியுள்ளன.

பிரபாகரனின் பிறந்தநாளைக் கொண்டாடிய இளைஞனிடம் சிறிலங்கா காவல்துறை விசாரணை

விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்தநாளைக் கொண்டாடினார் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பாக, முல்லைத்தீவில் இளைஞன் ஒருவர்  சிறிலங்கா காவல்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் – சிறிலங்கா படைச் சிப்பாய் கைது

கிளிநொச்சி – முழங்காவில் பகுதியில் பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர் சிறிலங்கா காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஈபிஆர்எல்எவ் கட்சியின் பொதுச்செயலருமான சிவசக்தி ஆனந்தன், வவுனியா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

சிங்கள- தமிழ் மாணவர்களுக்கிடையில் முரண்பாடு- வவுனியா வளாகம் மூடப்பட்டது

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் சிங்கள- தமிழ் மாணவர்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டதையடுத்து, வளாகம் இழுத்து மூடப்பட்டுள்ளது.

முன்னாள் போராளிகளின் பெயரில் புதியதொரு கட்சி ஆரம்பம்

கிளிநொச்சியில் முன்னாள் போராளிகளின் சார்பில் புதிய அரசியல் கட்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய ஜனநாயக போராளிகள் கட்சி என்ற பெயரில், இந்தக் கட்சி தொடங்கப்பட்டுள்ளது.

வட மாகாணசபை அமைச்சர் டெனீஸ்வரனை கட்சியில் இருந்து இடைநிறுத்தியது ரெலோ

அமைச்சர் பதவியில் இருந்து விலக மறுத்து வரும், வடக்கு மாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் டெனீஸ்வரனை, தமது கட்சியில் இருந்து ஆறு மாதங்களுக்கு இடை நிறுத்தி வைப்பதாக, தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அறிவித்துள்ளது.