மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

12 கட்சிகள், 2 சுயேட்சைகள் அதிபர் தேர்தலில் போட்டி

இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு, 12 அரசியல் கட்சிகளும், 2 சுயேட்சைகளும் விருப்பம் வெளியிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தலில் நானே போட்டியிடுவேன் – ரணில் அறிவிப்பு

அடுத்த அதிபர் தேர்தலில் தாமே போட்டியிடுவதற்கு விரும்புவதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தலுக்குப் பின்னர் நாடாளுமன்ற கலைப்பு குறித்து முடிவு

19 ஆவது திருத்தத்தின் மூலம் நிறைவேற்று அதிகாரம் சிறிலங்கா அதிபரிடம் இருந்து நீக்கப்பட்டிருப்பதால், இந்த ஆண்டின் இறுதியில் எதிர்பார்க்கப்படும் அதிபர் தேர்தல்களுக்குப் பின்னர், நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான எந்த முடிவும் சபை உறுப்பினர்களால் எடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

குண்டுதாரிகளை விட்டு விட்டு கோத்தாவை குடைகிறது சிஐடி – மகிந்த குற்றச்சாட்டு

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் கவனம் செலுத்தாமல், கோத்தாபய ராஜபக்சவின் மீதே குற்ற விசாரணைத் திணைக்களம் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது என பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

5 எம்.பிக்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

சிறிலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு வெளியேறி ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்படும் ஐந்து தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பழைய முறையில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – உச்சநீதிமன்றம்

பழைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையின் அடிப்படையில், மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடியாது என்று, சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

செப்ரெம்பர் 15க்குப் பின்னர் அதிபர் தேர்தல் அறிவிப்பு

வரும் செப்ரெம்பர் 15ஆம் நாளுக்குப் பின்னர் அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பதில் பிரதமராக லக்ஸ்மன் கிரியெல்ல

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க மாலைதீவுக்கு அதிகாரபூர்வ  பயணம் மேற்கொள்ளும் நிலையில், பதில் பிரதமராக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல செயற்படவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோத்தாவை மாற்றமாட்டோம் – மகிந்த

வரும் அதிபர் தேர்தலிலுக்கான வேட்பாளர் எந்தக் காரணத்தைக் கொண்டும் அவர் மாற்றம் செய்யப்படமாட்டார் என்று பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மைத்திரியை வேட்பாளராக அறிவிக்க மகிந்த ‘பச்சைக்கொடி’?

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையே நேற்றுமுன்தினம் இரவு  இரகசிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.