மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவாகப் போகும் 2000 பெண் பிரதிநிதிகள்

புதிதாக தெரிவு செய்யப்படும் உள்ளூராட்சி சபைகளுக்கு 2000இற்கும் அதிகமான பெண் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர் என்று தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.

வரும் 27ஆம் நாளுக்குப் பின்னர் வெளியாகிறது உள்ளூராட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களைக் கோரும் அறிவிப்பு வரும் நொவம்பர் 27ஆம் நாளுக்குப் பின்னர் வெளியிடப்படும் என்று சிறிலங்கா தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை டிசெம்பர் 8ஆம் நாள் பொறுப்பேற்கிறது சீன நிறுவனம்

சீனாவின் மேர்ச்சன்ட் ஹோல்டிங் நிறுவனமும், சிறிலங்கா துறைமுக அதிகாரசபையும் இணைந்து உருவாக்கிய கூட்டு முயற்சி நிறுவனம், அம்பாந்தோட்டை துறைமுகத்தை வரும் டிசெம்பர் 8ஆம் நாள் தொடக்கம் இயக்கவுள்ளது.

உடையும் நிலையில் அணைகள்- மூழ்கப்போகும் கொழும்பு

கடும் மழை பெய்யுமாயின், நூற்றாண்டு பழைமை வாய்ந்த அம்பத்தளை நீர்த்தேக்கம் உடைந்து, கொழும்பு நகரமும், சிறிலங்கா நாடாளுமன்றமும் வெள்ளத்தில் மூழ்கிப் போகும் என்று  சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் சீனாவின் தலையீடுகளால் பாதிப்பு இல்லை- இந்திய கடலோரக் காவல்படை

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் தலையீடுகள் குறித்து, இந்திய கடலோரக் காவல்படை கவலை கொள்ளவில்லை என்று இந்திய கடலோரக் காவல் படையின் பணிப்பாளர் ராஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்துக்கு தடை

லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் சிறிலங்காவில் நேற்று முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று இந்த இணைத்தளத்தை சிறிலங்காவில் பார்வையிட முடியாத நிலை காணப்பட்டது.

மோடியை முந்திய டுபாய் ‘லேடி’

டுபாயில் இருந்து “நெவஸ்கா லேடி” என்ற எண்ணெய் தாங்கி கப்பல் 40 ஆயிரம் மெட்றிக் தொன் பெற்றோலுடன், நேற்று மாலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

எரிபொருள் நெருக்கடியை தீர்ப்பதாக மைத்திரியிடம் மோடி வாக்குறுதி – கப்பலை அனுப்பினார்

சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு சாத்தியமான எல்லா வழிகளிலும் இந்தியா உதவும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

அபிவிருத்தி, கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்தும் திட்டங்களுக்கு உதவுவதாக ஜப்பான் வாக்குறுதி

சிறிலங்காவின் அபிவிருத்தித் திட்டங்களுக்கும், கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், தொடர்ந்து உதவிகளை வழங்குவதாக ஜப்பான் உறுதியளித்துள்ளது.

ரஷ்ய போர்க்கப்பல் கொள்வனவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் – ரொகான் பலேவத்த எச்சரிக்கை

நாடு ஏற்கனவே பொருளாதார நெருக்கடிகளுக்குள் சிக்கியுள்ள நிலையில், ரஷ்யாவிடம் இருந்து போர்க்கப்பலைக் கொள்வனவு செய்வது மோசமான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் என்று, சிறிலங்கா இலத்திரனியல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவரான ரொகான் பலேவத்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.