மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

தாக்குதல்களை தடுக்க சிறிலங்காவுக்கு கிடைக்கவுள்ள நவீன தொழில்நுட்ப உதவிகள்

இஸ்லாமிய தீவிரவாதிகள் மேலும் பல தாக்குதல்களை நடத்தும் அச்சுறுத்தல்கள் இருந்த போதும்,ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய  பெரும்பாலான வலையமைப்புகளை சிறிலங்கா பாதுகாப்பு பிரிவினர் அழித்து விட்டனர் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

ஹிஸ்புல்லா மகனுடன் கோத்தாவுக்கு நெருங்கிய தொடர்பு?

இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களுடன் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்குத் தொடர்புகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹிஸ்புல்லாவின் மகனுக்கும் கோத்தாபய ராஜபக்சவுக்கும் நெருக்கமான உறவுகள் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

சிறிலங்கா அதிபருடன் மல்லுக்கட்டப் போகும் பூஜித ஜயசுந்தர

நியாயமான காரணங்களின்றி தம்மை கட்டாய விடுமுறையில் அனுப்ப சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எடுத்த முடிவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்ய சிறிலங்காவின் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர முடிவு செய்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம் –  இராணுவத்தின் தேடுதலின் விளைவா?

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் இரத்தினம் விக்னேஸ்வரன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

பாடசாலைகள் ஆரம்பம் – 10 வீத மாணவர்களே வருகை

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர், சிறிலங்காவில் நேற்று பாடசாலைகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திறக்கப்பட்ட போதும், மாணவர்கள் வருகை மிகக் குறைந்தளவே இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மன்னார் வழியாக தமிழ்நாடு சென்றிருக்கலாம் சஹ்ரான் – சிறிலங்கா இராணுவத் தளபதி

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிம், தமிழ்நாடு வழியாக இந்தியாவின் ஏனைய நகரங்களுக்குப் பயணித்திருக்கலாம் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பில் பதற்றம் – ஊரடங்குச்சட்டம் அமுல்

சிறிலங்காவின் நீர்கொழும்பு நகரில் இன்று மாலை ஏற்பட்ட பதற்ற நிலையைத் தொடர்ந்து அங்கு காவல்துறை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

குண்டைப் பொருத்தி விட்டு தப்பினார் சஹ்ரான்? – புலனாய்வு அமைப்புகள் சந்தேகம்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிம், ஷங்ரி-லா விடுதி குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டமை குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள புலனாய்வு அமைப்புகள், அவர் உயிருடன் இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

மதத்துக்காக சாகப் போவதாக கூறினார் சஹ்ரான் – மனைவி பாத்திமா தகவல்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிமின்  மனைவி அப்துல் காதர் பாத்திமாவும், கடுவாபிட்டிய தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய மொகமட் ஹஸ்துனின்  மனைவி சாரா எனப்படும் புலஸ்தினி ராஜேந்திரனுமே, ஏப்ரல் 19ஆம் நாள், கிரிஉல்லவில் உள்ள ஆடையகத்தில் ஒன்பது வெண்ணிய மேற்சட்டை மற்றும் பாவாடைகளை வாங்கியுள்ளனர்.

சஹ்ரானை கொழும்பில் சந்தித்த சகோதரி மதனியா – 20 இலட்சம் ரூபா கிடைத்த வழி அம்பலம்

தற்கொலைக் குண்டுதாரியான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான சஹ்ரான் காசிமிடம் இருந்து கொழும்பில் வைத்து, 20 இலட்சம் ரூபாவைப் பெற்றதை, அவரது சகோதரியான, மொகமட் நியாஸ் மதனியா ஒப்புக் கொண்டுள்ளார்.