சிறிலங்கா மீதான கண்காணிப்பு தொடரும் – கூட்டமைப்பிடம் உறுதியளித்த ஐ.நா அதிகாரி
சிறிலங்கா மீதான ஐ.நாவின் நெருங்கிய கண்காணிப்பும், ஈடுபாடும் தொடரும் என்று அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா மீதான ஐ.நாவின் நெருங்கிய கண்காணிப்பும், ஈடுபாடும் தொடரும் என்று அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்துள்ளார்.
நேற்றுப்போல் இருக்கிறது…… அரவிந்தன் அண்ணாவின் வார்த்தைகள். அவர் மறைந்தே இன்றுடன் மூன்று ஆண்டுகளாகி விட்டன.
மக்கள் நம்பிக்கையிழந்து விட்ட பின்னரே, சிறிலங்கா அரசாங்கம் காணாமல் போனோர் பணியகத்தை உருவாக்கியுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மாலைதீவு அரசியலில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு நிலை- பிராந்திய வல்லரசுகளுக்கிடையிலான நேரடி சொற்போர் என்பதற்கு அப்பால், சிறிலங்காவில் நடந்த உள்ளுராட்சி சபை தேர்தலின் முடிவுகளைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலைமைகள், அரசியல் மாற்றத்துக்கு இட்டுச் செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மாலைதீவு அரசியலில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் இந்து சமுத்திரப் பிராந்திய புவிசார் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தத் தாக்கம் சிறிலங்காவில் ஆட்சியைக் கைப்பற்றும் என ஆய்வாளர்களால் குறிப்பிடப்படும் சிங்கள பௌத்த பேரினவாதத்தை எச்சரிக்கைக்கு உள்ளாக்குகிறது.
சிறிலங்காவில் நேற்று முன்தினம் நடந்த உள்ளூராட்சித் தேர்தலின் அனைத்து முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான, சிறிலங்கா பொதுஜன முன்னணி, 239 சபைகளைக் கைப்பற்றி அபார வெற்றியைப் பெற்றுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் உள்ள ஒரு நகர சபை மற்றும் நான்கு பிரதேசபைகளுக்காக நேற்று நடந்த தேர்தலின் அதிகாரபூர்வ முடிவுகள் இன்று காலை தொடக்கம்ட வெளியிடப்பட்டு வருகின்றன.
மன்னார் மாவட்டத்தில் உள்ள முசலி, நானாட்டான், மன்னார், மாந்தை மேற்கு பிரதேசபைகள் மற்றும் மன்னார் நகர சபைக்கு நேற்று நடந்த தேர்தலின் அதிகாரபூர்வ முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டு வருகின்றன.
நேற்று நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளின் இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபைத் தேர்தலில் அதிக ஆசனங்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ள போதும், அறுதிப் பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை.