மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

அவசரகாலச் சட்டம் இரண்டு மாதங்களுக்கு நீக்கப்படாது – அரசாங்கம் அறிவிப்பு

அவசரகாலச்சட்டம்  இன்னும் இரண்டு மாதங்களுக்கு நீக்கப்படாது என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

பேரிடரைக் காரணம் காட்டி பிற்போடப்படும் மாகாண சபைத் தேர்தல்கள்

சிறிலங்காவில் மாகாண சபை தேர்தல்கள்  மேலும் பிற்போடப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக, அரசாங்க வட்டாரங்களை மேற்கோள் காட்டும் செய்திகள் கூறுகின்றன.

வெனிசுவேலா நிலைமைகள் குறித்து சிறிலங்கா ஆழ்ந்த கவலை

வெனிசுவேலாவில் அண்மைய முன்னேற்றங்கள் குறித்து சிறிலங்கா அரசு ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளதுடன்,  நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இரண்டு மாதங்களில் வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களுக்கான தர நடைமுறைகள்

சிறிலங்காவுக்கு வரும் வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களைக் கையாள்வதற்கான தர நடைமுறைகள்,  அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இறுதி செய்யப்படும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

வெனிசுவேலாவில் அமெரிக்க தலையீட்டை கண்டித்து கொழும்பில் போராட்டத்துக்கு ஏற்பாடு

வெனிசுவேலாவில் அமெரிக்காவின் இராணுவத் தலையீட்டை கண்டித்து, கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்திய இராணுவத் தளபதி சிறிலங்காவுக்குப் பயணம்

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி எதிர்வரும் 7ஆம் நாள் தொடக்கம், 8ஆம் நாள் வரை  சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

வெனிசுவேலா விவகாரம்- ஜேவிபி நிலைப்பாடு வேறு, அரசாங்கத்தின் நிலைப்பாடு வேறு

அனைத்துலக சட்டம் மற்றும் ஐ.நா. சாசனம் மீறப்படுவது குறித்து நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆராய்வதற்க, ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டத்திற்கு சிறிலங்கா அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

வெனிசுவேலா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு ஜேவிபி கடும் கண்டனம்

வெனிசுவேலாவில் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பையும், அந்த நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ கடத்திச் செல்லப்பட்டதையும் ஜேவிபி கடுமையாக கண்டித்துள்ளது.

28 பாகிஸ்தானியர்களும், 2 சீனர்களும் மன்னாரை விட்டு வெளியேறினர்

மன்னாரில் காற்றாலை மின் திட்டத்தில் பணியாற்றிய 28 பாகிஸ்தானியர்களும் இரண்டு சீனர்களும், பணிகளை முடித்துக் கொண்டு, சிறிலங்காவை விட்டு வெளியேறியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தல் முறை குறித்து ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழு

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான தேர்தல் முறை குறித்து தீர்மானிப்பதற்கான  தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.