மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

அட்மிரல் கரன்னகொடவிடம் 8 மணி நேரம் விசாரணை

சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவிடம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் எட்டு மணி நேரம் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

‘எம்மை குற்றம்சாட்டியவர்கள் வாயடைத்துப் போயுள்ளனர்’ – சிறிலங்கா இராணுவத் தளபதி

மன்னார் புதைகுழி விவகாரத்தில் எந்த ஆதாரமும் இல்லாமல் சிறிலங்கா இராணுவத்தைக் குற்றம்சாட்ட முனைந்தவர்கள் வாயடைத்துப் போய் இருக்கிறார்கள் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக விசாரணை நடத்த மறுக்கும்  சிறிலங்கா இராணுவம்

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, உள்ளக விசாரணைகளை நடத்த  சிறிலங்கா இராணுவம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

இந்தியாவுடன் இணைந்து மத்தல விமான நிலையத்தை இயக்க அமைச்சரவை பச்சைக்கொடி

இந்தியாவின் விமான நிலைய அதிகார சபையுடன் இணைந்து, மத்தல அனைத்துலக விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு, சிறிலங்கா அமைச்சரவை பச்சைக்கொடி காண்பித்துள்ளது.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமனத்துக்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கண்டனம்

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டதற்கு, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பசெலெட் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளார்.

சிறுபான்மையினரின் ஆதரவு இன்றியே வெற்றி பெறுவேன் – கோத்தா

சிறுபான்மையினரின்- குறிப்பாக தமிழர்களின் ஆதரவு இன்றி, சிங்களப் பெரும்பான்மையினரின் ஆதரவுடன் தம்மால் அதிபர் தேர்தலில் வெற்றிபெற முடியும் என்று, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அட்மிரல் கரன்னகொடவைக் கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவை, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்வதற்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

வடக்குடன் உறவுகளை விரிவுபடுத்த சீன தூதுவர் திட்டம்

சிறிலங்காவுக்கான சீன தூதுவர் செங் ஷியுவான் வடக்கு மாகாணத்தில் இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

அட்மிரல் கரன்னகொட உள்ளிட்டோருக்கு எதிராக கொலை வழக்கு

சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட மற்றும் ஏனைய கடற்படை அதிகாரிகள் மீது, கொலை செய்தமை, கொலைக்கு உடந்தையாக இருந்தமை, கொலை செய்ய சூழ்ச்சி செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.

எல்லையை மீறும் இராஜதந்திரிகள் – சிறிசேன சீற்றம்

சில வெளிநாட்டுத் தூதுவர்கள் தமது எல்லையை மீறுகிறார்கள் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதிருப்தி வெளியிட்டுள்ளார்.