மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

மகிந்தவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி கைது

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின், தலைமைப் பாதுகாப்பு அதிகாரியான மேஜர் நெவில் வன்னியாராச்சி சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறிலங்கா கடற்படைக்கு ஜப்பான் வழங்கவுள்ள இரண்டு வகையான ட்ரோன்கள்

சிறிலங்கா கடற்படைக்கு இரண்டு வகையான ட்ரோன்களை ஜப்பான் வழங்கவுள்ளதாக, கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுயாதீன வழக்குத்தொடுநர் பணியகத்தை உருவாக்கும் பணிகள் ஆரம்பம்

சுயாதீன வழக்குத்தொடுநர் பணியகத்தை உருவாக்குவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நீதி மற்றும் நல்லிணக்கத் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும்

நீதி மற்றும் நல்லிணக்கத் திட்டங்களுக்கு அதிகாரத்தில் உள்ள எந்தவொரு அரசாங்கமும் போதுமான நிதியை ஒதுக்க வேண்டும் என்று சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கான இழப்பீட்டிற்கு புதிய முறை

காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான ஒரு புதிய முறையை சிறிலங்கா அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர், ஹர்ஷண நாணயக்கார, தெரிவித்துள்ளார்.

இலங்கை தேயிலைக்கு நோபல் பரிசா? – வாங்கிக் கட்டிய அமைச்சர்

கின்னஸ் உலக சாதனையை ‘நோபல் பரிசு’ என்று தவறாகக் குறிப்பிட்டு விட்டதாக, சிறிலங்காவின் தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி,  முகநூலில் ஒப்புக்கொண்டுள்ளார்.

சிறிலங்காவுக்கு 10 ட்ரோன்களை வழங்குகிறது ஜப்பான்

சிறிலங்கா கடற்படைக்கு ஜப்பான்  சுமார் 500 மில்லியன் யென் மதிப்புள்ள சுமார் 10 கண்காணிப்பு ட்ரோன்களை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக ஜப்பானிய ஊடகமான  ஜிஜி பிரஸ் ( Jiji Press) செய்தி வெளியிட்டுள்ளது.

ஜப்பானின் பாதுகாப்பு, நிதி அமைச்சர்களுடன் சிறிலங்கா அதிபர் பேச்சு

ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, ஜப்பானிய நிதி அமைச்சர் கட்டோ கட்சுனோபு (Kato Katsunobu)  மற்றும் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் டி.எம். நகடானி (D.M. Nakatani) ஆகியோருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

ஜப்பான் – சிறிலங்கா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்த இணக்கம்

சிறிலங்காவின் கடல்சார் கண்காணிப்பு மற்றும் பேரிடர் மீட்புத் திறன்களை மேம்படுத்துவதற்காக ஜப்பான் அதிநவீன ஜப்பானிய  ட்ரோன்களை வழங்க முடிவு செய்துள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் ஆதாரங்களை மறைத்த பாதுகாப்பு தலைவர் மீது விசாரணை

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணையைத் தடுக்கும் வகையில், பல முக்கியமான ஆதாரங்களை மறைத்ததாக கண்டறியப்பட்டுள்ள பாதுகாப்புத்துறை தலைவர் ஒருவர் மீது விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக சிங்கள வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.