மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

அம்பாந்தோட்டையில் சீனாவின் திட்டங்களை ‘நோட்டம்’ விட்டார் அமெரிக்கத் தூதுவர்

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் மற்றும், தூதரக அதிகாரிகள் குழுவொன்று, இரண்டு நாள் பயணமாக அம்பாந்தோட்டை சென்று, சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களைப் பார்வையிட்டுள்ளது.

லசந்த, பிரகீத் கொலைகளுடன் தொடர்புடைய ஆவணங்கள் மாயம் – சிறிலங்கா இராணுவம் கைவிரிப்பு

ஊடகவியலாளரான லசந்த விக்கிரமதுங்க படுகொலை மற்றும் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போன சம்பவம் தொடர்பான ஆவணங்கள் காணாமற்போயிருப்பதாகவும், அதுகுறித்து விசாரிக்க இரண்டு இராணுவ நீதிமன்றங்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், சிறிலங்கா இராணுவம் அறிவித்துள்ளது.

சலாவ வெடிவிபத்துக்கான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை – சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

சலாவ சிறிலங்கா இராணுவ ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறிய சம்பவத்தில், தீவிரவாத தொடர்பு அல்லது சதி ஏதும் இருந்ததாக விசாரணையில் கண்டறியப்படவில்லை என்றும், எனினும், இத்தகைய வாய்ப்புகளை நிராகரிப்பதற்கில்லை என்றும் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

படுகொலைகளில் ஈடுபட்ட படையினரைக் காப்பாற்றும் முயற்சியில் இராணுவத் தளபதி

சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராக சுமத்தப்படும் அரசியல் படுகொலைக் குற்றச்சாட்டுகள் விடயத்தில், விட்டுக் கொடுப்பு அணுகுமுறையைக் கடைப்பிடிக்குமாறு, சிறிலங்காவின் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரியவிடம், சிறிலங்கா இராணுவத் தளபதி கோரியுள்ளார்.

சீனாவுடன் வலுவான இராஜதந்திர உறவு ஏற்படுத்தப்படும் – சிறிலங்கா பிரதமர்

எதிர்காலத்தை மனதில் கொண்டு சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் வலுவான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை சாத்தியமில்லை – இந்திய அதிகாரிகள்

தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கு இந்திய சட்டத்தில் இடமில்லை என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொறுப்புக்கூறலில் அமெரிக்காவின் நிலைப்பாடு உறுதியானது – நிஷா பிஸ்வால்

சிறிலங்காவில் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதிலும், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்துக்கு தேவையான  நகர்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதிலும், அமெரிக்கா மிகவும் உறுதியான நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

மீண்டும் இந்தோனேசியாவுக்கே திரும்பியது இலங்கைத் தமிழ் அகதிகள் படகு

44 இலங்கைத் தமிழ் அகதிகளுடன், இந்தோனேசியக் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த படகு, அவுஸ்ரேலியா நோக்கிப் புறப்பட்டுச் சென்ற போதும், மீண்டும் அச்சே பகுதிக்குத் திரும்பி வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவுக்கு நகர்கிறது ஆயுதக் களஞ்சியம்? – வடக்கு நோக்கி நகர்த்தப்படும் வெடிபொருட்கள்

சலாவ சிறிலங்கா இராணுவ ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட பாரிய வெடிவிபத்தை அடுத்து, சிறிலங்கா படையினரின் வெடிபொருள் களஞ்சியங்களை தென்பகுதியில் இருந்து வடக்கு நோக்கி நகர்த்தும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் இருந்து புறப்பட்ட 44 இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தோனேசிய கடலில் தத்தளிப்பு

இலங்கைத் தமிழ் அகதிகள் 44 பேருடன், அவுஸ்ரேலியாவில் புகலிடம் தேடும் நோக்கில், இந்தியாவில் இருந்து புறப்பட்ட படகு ஒன்று இந்தோனேசியக் கடற்பரப்பில் இயந்திரக் கோளாறினால் தத்தளிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.