மேலும்

செய்தியாளர்: யாழ்ப்பாணச் செய்தியாளர்

யாழ். பல்கலைக்கழகத்தில் பௌத்த விகாரை அமைக்கக் கோரும் சுவரொட்டிகள் – கல்விச்சமூகம் அதிர்ச்சி

யாழ்.பல்கலைக்கழகத்தின் முன்புறம் பௌத்த விகாரை ஒன்று கட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, பல்கலைக்கழக வளாகத்தில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் யாழ். கல்விச் சமூகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அரசியலமைப்பு திருத்த யோசனைகளை சமர்ப்பிக்க வடக்கு மாகாணசபையும் குழு அமைப்பு

அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக வடக்கு மாகாணசபையின் சார்பில் யோசனையை முன்வைப்பதற்கு மாகாணசபை உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று நேற்று நியமிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் இந்தக் குழு பற்றிய விபரங்களை அறிவித்துள்ளார்.

அனைத்து தரப்புகளினதும் கருத்துகளை உள்வாங்கி தீர்வுத் திட்டத்தை தயாரிக்க கூட்டமைப்பு முடிவு

அனைத்து தமிழ்த் தரப்புக்களினதும் கருத்துக்களை உள்வாங்கியே, அரசியல் தீர்வுத் திட்டத்தைத் தயாரிப்பது என்று  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் தொடங்கியது – நழுவினார் விக்கி?

கிளிநொச்சியில் இன்று காலை ஆரம்பமாகியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்கவில்லை என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வடக்கு முதல்வரின் குற்றச்சாட்டுகளுக்கு சிறிலங்கா பிரதமர் அளித்த பதில்

வடக்கில் இருந்து சிறிலங்கா படையினர் படிப்படியாக குறைக்கப்படுவர் என்றும், காலாவதியாகிப் போயுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் விரைவில் நீக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

யாழ். பொங்கல் விழாக்களில் பங்கேற்காமல் நழுவிய கூட்டமைப்பு

சிறிலங்கா அரசாங்கத்தின் ஏற்பாட்டில், நேற்று யாழ்ப்பாணத்தில் நடந்த தேசிய பொங்கல் விழாவில் பங்கேற்காமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் நழுவிக் கொண்டுள்ளனர்.

நல்லிணக்கம், பொறுப்புக்கூறலுக்கு பிரித்தானியா உதவும் – பொங்கல் விழாவில் ஹியூகோ ஸ்வைர்

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் உள்ளிட்ட சிறிலங்காவின் முயற்சிகளுக்கு பிரித்தானியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று, பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வைர் தெரிவித்தார்.

தைப்பொங்கலுடன் முடிவுக்கு வந்த பனிப்போர்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும், ஒருவருக்கொருவர் முகம்கொடுக்காத- கடந்த சில மாதங்களாக நிலவி வந்த பனிப்போர், நேற்று முடிவுக்கு வந்தது.

வடக்கில் தமிழர்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழவில்லை – முதலமைச்சர் குற்றச்சாட்டு

சிறிலங்காவில் ஆட்சிமாற்றத்துக்குப் பின்னரும் வடக்கு மாகாணத்திலும் தமிழர்கள் வாழ்விலும் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழவில்லை என்று பட்டியல் போட்டுச் சுட்டிக்காட்டியுள்ளார் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

மூத்த தமிழ் இதழாசிரியர் இரத்தினசிங்கம் யாழ்ப்பாணத்தில் காலமானார்

இலங்கைத் தமிழ் ஊடகத்துறையின் மூத்த இதழாசிரியரான- கே.கே.ஆர் என அழைக்கப்படும், கந்தர் இரத்தினசிங்கம் (வயது 87) இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.