மேலும்

செய்தியாளர்: இந்தியச் செய்தியாளர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார் சிறிலங்கா அதிபர்

இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். புதுடெல்லியில் இந்தச் சந்திப்பு இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

புதுடெல்லி சென்றடைந்தார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இரண்டு நாள் பயணமாக இன்று பிற்பகல் புதுடெல்லியைச் சென்றடைந்தார். லண்டனில் இருந்து புதுடெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தைச் சென்றடைந்த சிறிலங்கா அதிபரை, இந்தியாவின் திட்டமிடல் மற்றும் பாதுகாப்பு இணை அமைச்சர் ராவ் இந்திரஜித்சிங் வரவேற்றார்.

உறவுகளை வலுப்படுத்த பங்களிப்பார் மைத்திரி – இந்தியா நம்பிக்கை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று புதுடெல்லிக்கு மேற்கொள்ளும் பயணத்தின் மூலம் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுப்படுத்தப்படும் என்று நம்புவதாக, இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மைத்திரி வருகைக்காக சாஞ்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பயணத்தை முன்னிட்டு, இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சாஞ்சியில், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

சிறிலங்காவுக்கான நிதி உதவிகளை பாதியாக வெட்டிக் குறைத்தது இந்தியா

இந்திய வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகளை, இந்திய நிதியமைச்சு வெட்டிக் குறைத்திருப்பதால், சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டவாறு கொடைகள், கடன்களை வழங்குவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கும்பமேளாவில் பங்கேற்க வரும் 14ஆம் நாள் இந்தியா செல்கிறார் மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இம்மாத நடுப்பகுதியில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜெயினில் நடக்கும் பிரபலமான, கும்பமேளா நிகழ்வில் பங்கேற்கவே சிறிலங்கா அதிபர் இந்தியா செல்லவுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை தண்டனைக் கைதிகள் – மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லையாம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ரவிச்சந்திரன் ஆகிய  7 பேரின் விடுதலை தொடர்பாக, இந்திய மத்திய அரசு இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தேஜஸ் போர் விமானங்களை வாங்குவதில் சிறிலங்கா, எகிப்து ஆர்வம்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானங்களைக் கொள்வனவு செய்வதில், சிறிலங்காவும், எகிப்தும் ஆர்வம்காட்டி வருவதாக, பிரிஐ செய்தி நிறுவனம், தகவல் வெளியிட்டுள்ளது.

தலைமன்னார்- இராமேஸ்வரம் பாலம் குறித்து விரைவில் உடன்பாடு – நிதின் கட்கரி

தலைமன்னாரையும், இராமேஸ்வரத்தையும் இணைக்கும் பாலத்தை அமைப்பது தொடர்பாக, இந்தியாவும் சிறிலங்காவில் விரைவில் உடன்பாடு ஒன்றுக்கு வரும் என இந்தியாவின் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்திய பாதுகாப்பு அமைச்சர், தளபதிகளுடன் சிறிலங்கா கூட்டுப் படைத் தளபதி பேச்சு

நான்கு நாள் பயணமாக, இந்தியா சென்றுள்ள சிறிலங்கா கூட்டுப் படைகளின் தளபதி எயர் சீவ் மார்ஷல்  கோலித குணதிலக, இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் மற்றும் இந்திய விமானப்படை மற்றும் கடற்படைத் தளபதிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.