மராட்டிய முதல்வரைச் சந்தித்தார் மகிந்த
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நேற்று மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நேற்று மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் வடக்கு, கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்வதில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மூன்று நாட்கள் பயணமாக இந்தியா சென்றுள்ள சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு மகாராஷ்டிரா மாநில அரசின் சிறப்பு கொமாண்டோ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
புனேயில் நடைபெறும் இந்திய – சிறிலங்கா இராணுவத்தினர் பங்கேற்கும், ‘மித்ரசக்தி’ கூட்டுப் பயிற்சியில், இந்திய இராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள ஆயுதங்கள், சிறிலங்கா படையினருக்காக காட்சிப்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீனவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக, இந்திய- சிறிலங்கா அமைச்சர்கள் மட்டப் பேச்சுக்கள் நேற்று புதுடெல்லியில் இடம்பெற்றன.
இந்திய- சிறிலங்கா இராணுவத்தினருக்கு இடையிலான ‘மித்ர சக்தி- 2017’ கூட்டுப் பயிற்சி, நாளை மறுநாள் ஆரம்பமாகவுள்ளது. புனேயில் உள்ள அவுண்ட் இராணுவ முகாமில் இந்தக் கூட்டுப் பயிற்சி எதிர்வரும் 25ஆம் நாள் வரை தொடர்ந்து இடம்பெறும்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வழிபாடுகளில் பங்கேற்பதற்காக நேற்று திருப்பதி வந்தடைந்தார். திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்காக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அவரது துணைவியாருடன், நேற்று திருப்பதி வந்தார்.
இந்திய அமைதிப்படை சிறிலங்காவில் நிலைகொண்டிருந்த போது, விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரை நடத்திய முக்கிய கட்டளை அதிகாரிகளில் ஒருவரான பிரிகேடியர் பி.டி மிஸ்ரா, அருணாசல பிரதேச மாநில ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநில அரசாங்கம் சிறிலங்காவில் கைத்தொழில் நடைக்கூடம் ( industrial corridor ) ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.