சுவிசில் இலங்கைத் தமிழ் அகதி சுட்டுக்கொலை
சுவிட்சர்லாந்தின் பிரிசாகோ நகரில் உள்ள அகதிகள் நிலையம் ஒன்றில் நேற்று அதிகாலையில் சுவிஸ் காவல்துறையினரால் இலங்கைத் தமிழ் அகதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சுவிட்சர்லாந்தின் பிரிசாகோ நகரில் உள்ள அகதிகள் நிலையம் ஒன்றில் நேற்று அதிகாலையில் சுவிஸ் காவல்துறையினரால் இலங்கைத் தமிழ் அகதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு, அணுஆயுதங்களை அழிப்பதற்கான அனைத்துலகப் பரப்புரை அமைப்புக்கு வழங்கப்படுவதாக ஒஸ்லோவில் நோபல் பரிசுக் குழு அறிவித்துள்ளது.
ஆசிய -பசுபிக் விவகாரங்களுக்கான பிரித்தானிய அமைச்சர் மார்க் பீல்ட் நாளை சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின் போது அவர் யாழ்ப்பாணத்துக்கும் செல்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகப்பரப்பில் ஊடகம் என்பது என்ன? அதன் பண்புகள் எவை? என்ற கேள்விகளுக்கு அவ்வளவு இலகுவாக விடை காண முடியாது. நவீன தொழில்நுட்பப் புரட்சியுடன் தோன்றிய தகவல் தொழில்நுட்பம் என்பது செய்தித்தாள் என்ற அச்சு ஊடகமாக ஆரம்பித்து இன்று வானொலி, தொலைக்காட்சி, இணையத்தளம் உள்ளிட்ட அதிவேக தகவல் பரிவர்த்தனை பரப்புக்களுக்குள் படர்ந்து ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தும் தனித்தும் மானிடப்பரப்பை ஊடறுத்து நிற்கின்றது.
அமைதிக்கான நோபல் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைதிக்கான ஒஸ்லோ ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
நாடகர், ஊடகர், ஏடகர் ஏ.சீ. தாசீசியஸ் அவர்களின் பவளவிழா அண்மையில் சுவிஸ் நாட்டின் லுற்சர்ன் நகரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழர் கலை பண்பாட்டு நடுவம் எனும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் தாய்த் தமிழகத்தின் நவீன நாடக முன்னோடிகளுள் ஒருவரும் பெண்ணியச் செயற்பாட்டாளருமான பேராசிரியர் அ.மங்கை அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார்.
சிவில் சமூகப் பிரதிநிதிகள் அச்சுறுத்தப்பட்டு வருவதாக சிறிலங்கா மீது, மனித உரிமைகளுக்கான ஐ.நாவின் உதவிச்செயலர் அன்ட்ரூ கில்மோர் குற்றம்சாட்டியுள்ளார்.
நாடகம், ஊடகத்துறை விற்பன்னரும், புலம்பெயர் தமிழ் மாணவர்களுக்கான கல்வி நூல் ஆக்கப் பணிகளில் களப்பணி ஆற்றியவருமான, ஆசான் ஏ.சி.தாசீசியஸ் அவர்களின் பவளவிழா நிகழ்வு சுவிற்சர்லாந்தின், லுசேர்னில் இன்று நடைபெறவுள்ளது.
காணாமல்போனோர் பணியகத்தை சிறிலங்கா உடனடியாக செயற்படுத்த வேண்டும் என்றும், ஏனைய நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் வலியுறுத்தியுள்ளார்.
பிரேசிலை விட்டுத் தப்பிச் சென்ற சிறிலங்கா தூதுவரான, ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிரான வழக்கை, ஹேக்கில் உள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று பிரித்தானிய பிரித்தானிய நாடாளுமன்றத்தின் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவரான, போல் ஸ்கலி தெரிவித்துள்ளார்.