சுவிசில் புலிகளுக்கு நிதி சேகரித்த வழக்கு – விசாரணைகள் முடிவு, தீர்ப்பு ஜூனில்
சுவிட்சர்லாந்தில் விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள 13 ஈழத் தமிழர்களுக்கும் எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு நேற்று முடிவடைந்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஜூன் மாதம் 14ஆம் நாள் அறிவிக்கப்படும்.


