மேலும்

செய்தியாளர்: ஐரோப்பியச் செய்தியாளர்

மைத்திரிக்கு எதிராக லண்டனில் போராட்டங்கள்

பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நேற்று புலம்பெயர் தமிழர் அமைப்புகளால் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் போர்க்குற்ற ஆவணப்படம் – மைத்திரிக்கு நெருக்கடி

சிறிலங்காவின் போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும், ‘போர் தவிர்ப்பு வலயம்: சிறிலங்காவின் கொலைக்களங்கள்’ என்ற, சனல் 4 தொலைக்காட்சியில் வெளியிட்ட ஆவணப்படத்தின் சிங்கள மொழியாக்க காணொளி இன்று பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் திரையிடப்படவுள்ளது.

மீண்டும் தவறு இழைக்கக் கூடாது – சிறிலங்காவுக்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் எச்சரிக்கை

சிறிலங்கா அரசாங்கத்தினால் கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட தவறுகள் மீண்டும் இடம்பெறக் கூடாது என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் எச்சரித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளருடன் மங்கள சமரவீர பேச்சு

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று ஜெனிவாவில் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

சிறிலங்காவின் நல்லிணக்க முயற்சிகளுக்கு ஜப்பான் ஆதரவு

சிறிலங்காவில் தேசிய நல்லிணக்கத்தை அடைவதற்கு மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக, ஜப்பான் தெரிவித்துள்ளது.

செப்ரெம்பருக்குப் பின்னரும் அறிக்கையைத் தாமதிக்கக் கூடாது – பிரித்தானியா வலியுறுத்தல்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் சிறிலங்கா தொடர்பான விசாரணை அறிக்கையை வெளியிடுவதை செப்ரெம்பர் மாதத்துக்குப் பின்னரும், தாமதிக்கக் கூடாது என்று பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்கா விவகாரத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பங்கு – ஜோன் கெரி பாராட்டு

சிறிலங்கா விவகாரத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை வகித்த பங்கை அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி பாராட்டியுள்ளார். இன்று ஜெனிவாவில் ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத்தொடரில், உயர்மட்டப் பிரதிநிதிகளின் உரை அமர்வில் ஆற்றிய உரையின் போதே அவர் இவ்வாறு பாராட்டியுள்ளார்.

பிரான்சில் ‘தமிழர் திருநாள் – 2015’ – சிலம்பு அமைப்பின் அறிக்கை

பிரான்சில் சிலம்பு அமைப்பினரால் முன்னெடுக்கப்படும் பொங்கல் நாளான ‘தமிழர் திருநாள் – 2015’ ஒன்பதாவது ஆண்டாக எதிர்வரும் 24 25 ஆகிய இருநாட்கள் இடம்பெற உள்ளதாக அவ்வமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா விசாரணைக்கு சிறிலங்கா ஒத்துழைக்க வேண்டும் – பிரித்தானியா வலியுறுத்தல்

ஐ.நா விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், சாட்சிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் சிறிலங்கா அரசாங்கத்திடம் பிரித்தானியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.