பொறுப்புக்கூறல், நல்லிணக்கத்தை சிறிலங்கா உறுதிப்படுத்த வேண்டும் – ஜெனிவாவில் அமெரிக்கா
பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் செயற்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் செயற்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்துக்கான சிறிலங்கா அரசாங்கத்தின் உள்நாட்டுப் பொறிமுறை, வரும் செப்ரெம்பர் மாதம் நடக்கவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடருக்கு முன்னர் உருவாக்கப்பட வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் வலியுறுத்தியுள்ளார்.
சிறிலங்கா அரசாங்க, தமிழர் பிரதிநிதிகள், அனைத்துலக சமூகப் பிரதிநிதிகளுக்கு இடையில் பிரித்தானியாவில் நடைபெறும் பேச்சுக்களில், போர்க்குற்ற விசாரணை குறித்தோ, அரசியல்தீர்வு குறித்தோ விவாதிக்கப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பிரான்சில் மிதிவண்டி விபத்தில் சிக்கி அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி படுகாயமடைந்துள்ளார். அவரது கால் முறிந்த நிலையில் ஜெனிவா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிறிலங்கா விவகாரம் தொடர்பாக, லண்டனில் உள்ள புலம்பெயர் தமிழர்களின் அமைப்புகளில் ஒன்றாக உலகத் தமிழர் பேரவையுடன், தென்னாபிரிக்க பிரதி அமைச்சர் நோமான்டியா பெகேட்டோ பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
பிரான்சில் நேற்றிரவு நடந்த உலகப் புகழ்பெற்ற 68வது கேன்ஸ் திரைப்பட விழாவில், முன்னாள் ஈழப்போராளியின் புலம்பெயர் வாழ்வை சித்திரிக்கும் தீபன் திரைப்படம், Palme d’Or என்ற உயரிய விருதை பெற்றுள்ளது.
நோர்வேயின் 10 முதன்மை வெளிநாட்டவர்களில் (Top 10) ஒருவராக ஈழத்தமிழ் பெண்ணான மகா சிற்றம்பலம் தெரிவாகியுள்ளார். 48 வயதான இவர் 1987ஆம் ஆண்டு, தனது 20வது வயதில் ஈழத்திலிருந்து நோர்வேக்குப் புலம்பெயர்ந்தவர்.
பிரித்தானியாவில் நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் டேவிட் கமரொன் தலைமையிலான கொன்சர்வேட்டிவ் கட்சி அறுதிப் பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றி, வெற்றி பெற்றுள்ளது.
பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட ஈழத் தமிழரான உமா குமரன், ஹரோ ஈஸ்ட் தொகுதியில் கொன்சர்வேட்டிவ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.
பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில், முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், இதுவரை வெளியான முடிவுகளில் தொழிற்கட்சி முன்னிலையில் உள்ளது.