மேலும்

செய்தியாளர்: ஐரோப்பியச் செய்தியாளர்

பிரித்தானியாவின் புதிய பிரதமராகப் பதவியேற்றார் தெரசா மே

பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் நேற்று முறைப்படி பதவி விலகியதையடுத்து, அந்த நாட்டின் புதிய பிரதமராக, தெரசா மே பதவியேற்றார்.

நீண்ட பயணத்தின் ஆரம்பநிலையிலேயே சிறிலங்கா நிற்கிறது – ஐரோப்பிய ஒன்றியம்

போருடன் தொடர்புடைய பொறுப்புக்கூறல் செயல்முறைகளில், அனைத்துலக பங்களிப்பை சிறிலங்கா அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி தெரிவித்தார்.

சிறிலங்கா இன்னமும் முன்னேற்றங்களை வெளிப்படுத்த வேண்டும் – நாடுகள் வலியுறுத்தல்

மனித உரிமைகள் விவகாரத்தில், சிறிலங்கா மேலும் முன்னேற்றங்களை காண்பிக்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ள அதேவேளை, வெளித்தலையீடுகளின்றி உள்நாட்டு விவகாரங்களுக்குத் தீர்வு காண, சிறிலங்கா அனுமதிக்கப்பட வேண்டும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

2018ஆம் ஆண்டுக்குள் பொதுமக்களின் காணிகள் ஒப்படைக்கப்படும் – மங்கள சமரவீர

வடக்கில் சிறிலங்கா படையினர் வசம் உள்ள பொதுமக்களின் காணிகள் அனைத்தும், எதிர்வரும் 2018ஆம் ஆண்டு இறுதிக்குள் கையளிக்கப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் ஜெனிவாவில் உறுதியளித்துள்ளது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரைச் சந்தித்தார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். ஜெனிவாவில் உள்ள ஐ.நா செயலகத்தில் இந்தச் சந்திப்பு நேற்றுக்காலை இடம்பெற்றது.

வடக்கு, கிழக்கில் அதிக இராணுவப் பிரசன்னம் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

சிறிலங்காவின் வடக்கு, கிழக்கில் அதிகளவு இராணுவப் பிரச்சனம் இருப்பதாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹசேன் தெரிவித்துள்ளார்.

போரில் கொத்தணிக் குண்டுகளை பயன்படுத்தியிருந்தால் பாரதூரமானது – மங்கள சமரவீர

இறுதிக்கட்டப் போரில் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தால் அது பாரதூரமான விடயமாக இருக்கும் என்று, சி்றிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் மங்கள சமரவீர – சிறிலங்கா அரசின் நிலைப்பாட்டை விளக்குவார்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடரில், சிறிலங்கா தொடர்பான வாய்மூல அறிக்கையை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் நாளை அதிகாரபூர்வமாக வெளியிடவுள்ள நிலையில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று ஜெனிவா சென்றடைந்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுகிறது பிரித்தானியா

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற வேண்டுமா – இல்லையா என்பதை தீர்மானிக்க நேற்று பிரித்தானிய மக்களிடையே நடத்தப்பட்ட கருத்து வாக்கெடுப்பில், அதிகளவு மக்கள் வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

பிரித்தானிய கருத்து வாக்கெடுப்பு – ஆரம்பக்கட்ட முடிவுகளில் கடும் போட்டி

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருப்பதா அல்லது அதனை விட்டு பிரிந்து செல்வதா என்பது குறித்து பிரித்தானிய மக்கள் மத்தியில் நேற்று நடத்தப்பட்ட கருத்து வாக்கெடுப்பின் முன்னணி நிலவரம் வெளியாகத் தொடங்கியுள்ளது.