மேலும்

செய்தியாளர்: ஐரோப்பியச் செய்தியாளர்

சிறிலங்காவுக்கு காலஅவகாசம் வழங்கக் கோருகிறது பிரித்தானியா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், 2015 ஒக்ரோபரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, சிறிலங்காவுக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று பிரித்தானியா கோரியுள்ளது.

ஜெனிவா உரையில் காலஅவகாசம் கோராத சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இன்று உரையாற்றிய சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கால அவகாசம் தருமாறு பகிரங்க கோரிக்கையை விடுக்கவில்லை.

ஜேர்மனி, சுவிஸ், துருக்கி தாக்குதல்களால் அதிர்ச்சியில் ஐரோப்பா

ஜேர்மனியின் பேர்லின் நகரில் பார ஊர்தி ஒன்றை சந்தைக்குள் செலுத்தி நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும், துருக்கியில் ரஷ்யத் தூதுவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் என்பன ஐரோப்பாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறிலங்காவில் ஆட்சி மாறினாலும் வெள்ளைவான் கடத்தல் தொடர்கிறது – ஐ.நா குழு

சிறிலங்காவில் கடந்த ஆண்டு புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த போதிலும், வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்கின்றன என்று சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் துணைத் தலைவர் பெலிஸ் காயர் தெரிவித்துள்ளார்.

புலிகளுடன் தொடர்புடைய அகதிகளை பாதுகாக்க வேண்டிய தேவை குறைந்துள்ளது – சுவிஸ் அரசு

சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலைமைகள் முன்னேற்றமடைந்துள்ளதால், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்று அடைக்கலம் கோரியவர்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை குறைந்துள்ளதாக சுவிற்சர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பிரித்தானிய வெளிவிவகார, கொமன்வெல்த் பணியக இணை அமைச்சராக அலோக் சர்மா நியமனம்

பிரித்தானியாவின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள தெரெசா மே, ஆசிய – பசுபிக் விவகாரங்களைக் கையாளும், வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அலோக் சர்மாவை நியமித்துள்ளார்.

வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறிலங்கா இன்னும் அதிகம் செய்ய வேண்டும் – பிரித்தானியா

சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம்  ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற, அந்த நாடு இன்னும் அதிகம் செய்ய வேண்டியிருப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.

ஜேர்மனியின் மியூனிச் நகரில் தீவிரவாதத் தாக்குதல் – 10 பேர் பலி

ஜேர்மனியின் மியூனிச் நகரில் உள்ள ஒலிம்பியா வணிக வளாகத்தில் நேற்றுமாலை நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில், 10 பேர் கொல்லப்பட்டதாக ஜேர்மனிய காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டியதாக 13 பேருக்கு எதிராக சுவிசில் வழக்கு

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்காக, மில்லியன் கணக்கான டொலர்களை திரட்டினார்கள் என்று, விடுதலைப் புலிகளின் 13 செயற்பாட்டாளர்களுக்கு எதிராக சுவிஸ் சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

பிரான்சில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்- 75 பேர் பலி

பிரான்சின் தென்பகுதியில் உள்ள நைஸ் நகரில், நேற்றிரவு இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல் ஒன்றில் 75 பேர் கொல்லப்பட்டதாகவும், 100 பேருக்கு மேல் காயமடைந்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.