சிறைக்கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரிப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று முன்தினமும் நேற்றும் இடம்பெற்ற வன்முறைகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.
நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, இந்த எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 7 பேர் சிறைச்சாலை அதிகாரிகள் என்றும், 20 பேர் கைதிகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தை அடுத்து படுகாயம் அடைந்த 29 பேர் கொழும்பு தேசிய மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
15 சிறைச்சாலை அதிகாரிகளும், 14 கைதிகளும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் 12 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்த வன்முறைகளில் 23 சிறைச்சாலை அதிகாரிகளும், 54 சிறைக்கைதிகளும் காயம் அடைந்துள்ளதாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

