நீர்கொழும்பு சிறைக் கலவரம்- விசாரிக்க மூவர் கொண்ட குழு நியமனம்
நீர்கொழும்பு சிறையில் இடம்பெற்ற கலவரம் குறித்து விரிவான விசாரணை நடத்துவதற்காக, சிறிலங்கா அரசாங்கம் மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவை நியமித்துள்ளது.
இந்தச் சம்பவத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகளை விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, சிறிலங்கா அதிபரின் செயலாளர் நந்திக சனத் குமநாயக்கவினால், அமைச்சரவையின் ஒப்புதலுடன் இந்தக் குழு இன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தக் குழுவிற்கு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ தலைமை தாங்குகிறார். மிலிந்த குணதிலக மற்றும் மோகன் வீரக்கோன் ஆகியோர் இதன் ஏனைய உறுப்பினர்களாவர்.
நீர்கொழும்பு சிறையில் நடந்த வன்முறைக் கலவரத்தைத் தொடர்ந்து இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது. இதில் 27 பேர் உயிரிழந்ததுடன் 100 பேர் வரை காயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்திற்கான காரணங்களைக் கண்டறிந்து, தனது கண்டுபிடிப்புகளை சிறிலங்கா அரசாங்கத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கும் பணி இந்தக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
