85 மெ.தொன் நிவாரணப் பொருட்களுடன் வந்தது சீன விமானம்
டிட்வா புயலினால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் மீட்புப் பணிகளுக்கு ஆதரவாக, சீனா 85 மெட்ரிக் தொன் நிவாரணப் பொருட்களை சிறிலங்காவுக்கு அனுப்பி வைத்துள்ளது.
உயிர்காப்பு கவசங்கள், கூடாரங்கள், போர்வைகள் மற்றும் விரிப்புகள் உள்ளிட்ட உதவிப் பொருட்களை ஏற்றிய சரக்கு விமானம் இன்று முற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
அங்கு நடந்த நிகழ்வில், நிவாரணப் பொருட்களை, சீனத் தூதுவர் கீ சென்ஹொங், சிறிலங்காவின் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர ஆகியோரிடம் கையளித்துள்ளார்.
இந்த நன்கொடையின் மதிப்பு சுமார் 400 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

