மேலும்

கேப்பாப்புலவில் காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் போராட்டம்

சிறிலங்கா இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் நேற்று 12வது நாளை எட்டிய நிலையில், இராணுவ முகாமின்  பிரதான வாயிலுக்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

காணிகளை விடுவிக்க கோரி போராடும் மக்களுக்கு  இதுவரை உரிய தீர்வு எட்டப்படாத காரணத்தால், நேற்றுக் காலை கேப்பாபுலவு இராணுவமுகாமின் பிரதான வாயிலுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதையடுத்து, தொடர் போராட்டம் மேற்கொள்ளும் பந்தல் நோக்கி பேரணி நடத்தப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது காணிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளதுடன் மக்களின் பயன்பாட்டிற்காக இருந்த பாடசாலை, ஆலயம், தேவாலயம் மற்றும் பொதுமண்டபம் ஆகியவற்றையும் சிறிலங்கா இராணுவம் தொடர்ந்து தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக  தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *